உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய தமிழகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிககனுர் 13

பதிகாரம் ஒன்றே இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகின்றது.

சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட் டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது. அக்காலத்தில் நாடகம் என்ற சொல் கூத்து என்ற சொல் போலவே நடனத்தையும் கதை தழுவி வரும் கூத்தையும குறித் தது. 'நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்" (மணி மேகலை, 19. 80) என வரும் தொடரில் உள்ள நாட கம்” என்னும் சொல்லுக்குக் 'கதை தழுவி வரும் கூத்து' என்று டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் எழுதியிருப்பது கவனிக்கத்தகும். எனவே, நாடகம் பற்றிய காவியங்கள் மணிமேகலை ஆசிரியர் காலத்தில் (கி. பி. 2-ஆம் நூற்ருண்டில்) இருந்தன. என்பது தெளிவு. மணி மேகலைக்கு முற்பட்ட திருக் குறளிலும் 'கூத்தாட்டு அவை” (குறள், 334) குறிக்கப் பட்டுள்ளது. இங்குக் கூத்தாடுதல்-நடித்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. -

கூத்து அல்லது நாடகம் என்பது துண்கலைகளுள் ஒன்ருகும். வெளி நாடுகளுடன் பன்னெடுங்காலமாக வாணிகம் செய்து வந்த தமிழர்-இயல், இசைக்கலே களில் வல்லரா யிருந்த தமிழர்-நாடகக் கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று கொள்வது தவரு காது. இயல், இசை என்னும் இரண்டு பிரிவுகளும் கேட்பவருக்கு இன்புத்தைத் தருவன; நாடகம் கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பமும் பயப்பதாகும். எனவே, நாடகமே மிக்க பயனுள்ளதாக அறிவுடை யோர் கருதுவர். நாடகத்தில் இயல், இசை, ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/13&oldid=999950" இலிருந்து மீள்விக்கப்பட்டது