6 புதிய தமிழகம்
பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள், தமிழையும் தெலுங் கையும் உறழ்ந்து பேசிவருதலைக் கொண்டு, அத்தமிழர் ண்ேடகாலமாக இருந்துவருபவர் என்னும் உண்மையை உணரலாம். திருப்பதியில் உள்ள கல்வெட்டுக்களுள் பெரும்பாலும் தமிழக் கல்வெட்டுக்களாக இருப்பதைக் கொண்டு இவ்வுண்மை வலியுறும். மேலும், திருவேங் கடம் பற்றிய சமயப் பாடல்களை ஆராயுமுன் அவற் றைப் பாடிய ஆந்திரரைவிடத் தமிழரே எண்ணிக்கை யிலும், காலப் பழமையிலும் மிக்கவர் என்பதை அறிய லாம். இவையனைத்தும் வேங்கடம் தமிழகத்தின் வட எல்லே என்பதை நன்கு வலியுறுத்தும் உண்மைகளாகும.
சிற்றுார் என்பது சித்துளர் ஆகி இன்று தெலுங்கு மாவட்டமாகக் கருதப்படுகிறது. அம்மாவட்டத்திலும் தமிழ்க் கல்வெட்டுக்களே மிகுதி. பல தாலுக்காக்களில் தமிழரே மிகுதியாக இருக்கின்றனர். தணிகைப் புரா ணம் பாடப்பெற்ற திருத்தணிகையும், அதன் சுற்றுப் புறப் பகுதிகளும் தமிழ்நாட்டைச் சேரவேண்டுவனவே. ஆதலால், எல்லேயைப்பற்றி விவாதிக்க இருக்கும் தமிழ் நாட்டு அமைச்சர்கள் இவற்றை ஆந்திரநாட்டு அமைச் சர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி, பண்டைக் காலத்தில் இயற்கையாக அமைந்த மலைநாட்டு எல்லே யைத் தமிழகத்து வட எல்லேயாக கிலே நிறுத்துதல் மிக வும் இன்றியமையாதது.
தென்-மேல் எல்லைப்புறம்
தமிழகத்தின் தெற்கில் குமரிமுனை ப ண் ைட க் காலத்துத் தெற்கெல்லேயாக இருந்தது; இடைக்காலத்