உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்கால இலக்கியப் படைப்புக் கொள்கைகள்

21

இவை முற்கூறிய இருபிரிவினருக்கும் பொதுவான கருத்துக்கள்.

இப்போக்குகளை இலக்கியத்திலும் கலையிலும் பிரதிபலித்தவர்கள் பெட்ரார்க் (கவிஞர்), தாந்தே (காவியக்கவிஞர்), பொக்காஸியோ (டெக்கமரான் என்ற நூலாசிரியர்), இராஸ் மஸ், புருனோ (தத்துவாசிரியர்கள்), லியனார்டோடா வினிச் (சகல கலாவல்லவர், விஞ்ஞானி), ஷேக்ஸ்பியர் (நாடக ஆசிரியர்), பிரான்ஸிஸ் பேக்கன் (லோயக தத்துவவாதி). இவர்களை அறிவொளி பரப்பியவர்கள் (Enlighteners) என்று இலக்கிய வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள். இவர்களில் பலர் உலகாயதக் கருத்துக்களுக்கும் உலக வாழ்க்கைக்கும் முதன்மையளித்தனர்.

இவர்களில் பலர் நிலவுடைமைக் குடும்பங்களில் பிறந்து, தங்கள் வர்க்கத்திற்கு எதிராகவே கலகம் செய்தனர். சிலர் மத்தியதர வியாபாரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இயல்பாகவே அவர்களுடைய வளர்ச்சிக்கு நிலவுடைமைச் சமுதாயத்தை எதிர்க்கவேண்டியிருந்தது.

அவர்கள் காலத்தில் விவசாயிகள் போராட்டங்கள் பல ஐரோப்பாவில் நடைபெற்றன. இவர்கள் தனித்து நின்று நிலவுடைமையை எதிர்த்தார்களே தவிர, அதனை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களிலிருந்து தனித்து நின்றார்கள். அதற்கு. அவர்களது வர்க்கம் பிறப்பே (Class origin) காரணமாகும். இதனால் உழைப்பாளி மக்களுக்கு எதிர்ப்பான கருத்துக்களை இவர்களுள் சிலர் கொண்டிருந்தனர். ஷேக்ஸ்பியர் அவ்வாறல்ல. நிலவுடைமைச் சமுதாயத்தின் ஊழல்களை, சாதாரண மக்களுடைய பார்வையில் இவர் விளக்கினார். உதாரணமாக ‘இரண்டாவது ரிச்சர்டு’ என்ற நாடகத்தில் அவனது அழிவுக்கு என்ன காரணம் என்பதை இரண்டு தோட்டக்காரர்கள் பேச்சில் வைத்துத் தெளிவுபடுத்துகிறார். அவரது வரலாற்று நாடகங்களில் ‘தெய்வீக அரசு உரிமை’க் கொள்கையைக் கேலி செய்கிறார். மதகுருமார்கள் தெய்வீகநெறி காட்டுவதைவிட அரசியல் சூழ்ச்சிகளிலும் ஆதிக்கப் போட்டிகளிலும் ஈடுபடுவதை வெளிப்படுத்துகிறார். இவரை அக்காலத்து மனிதநேசவாதிகளில் மிகச் சிறந்தவர் என்று கூறலாம். அதே போலத் தான் காவியக்கவிஞன் தாந்தேயையும் கருதலாம். ‘நரகம்’ (inferno) என்ற அவருடைய காவியத்தில் இத்தகைய மனித நேசக் கருத்துக்கள் மிகுதியும் உள்ளன.

இக்கொள்கையின் வளர்ச்சிப் போக்கு 18ஆம் நூற்றாண்டில் உச்சநிலை எய்தியது. அதற்குக் காரணம் நிலவுடைமைச் சமுதாயத்தின் சீர்குலைவும், அதனை ஒழிக்க முன்வந்த முத