உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நா. வானமாமலை

டத் தொடங்கின. ஏகபோக முதலாளித்துவம் தனது சமூக அடிப்படைப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது. இச்சமூகச் சூழ்நிலையில்தான் சோசலிஸ்டு யதார்த்தவாதம் தோன்றியது. இது சமுதாய வளர்ச்சி விதிகளை உணர்ந்து, போராடும் வர்க்கங்களுக்கிடையே தனது ஸ்தானம் மிக முற்போக்கான சமூகப் புரட்சிச் சக்திகளிடம்தான் என்று தீர்மானித்துச் சமூக உண்மையை இத்தெளிவின் நோக்கில் சித்தரிப்பதாகும்.

சமுதாயத்தை மாற்றப் போராடும் மனிதன் இப்படைப்பாளிகளின் கதாநாயகன் ஆனான். அவன் தனது குறிக்கோளான சோசலிஸ்டுச் சமுதாயத்திற்காகப் போராடுவதில் எவ்விதத் தியாகத்திற்கும் தயாரானவனாக இருந்ததைச் சோசலிஸ்டு யதார்த்தவாதிகள் சித்தரித்தனர். இப்போக்கின் தந்தை மாக்சிம் கார்க்கி, அவரது நாவல் தாய் இப் புதுப் போக்கின் முதல் படைப்பு. அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இப்பணியில் சேர்ந்தனர். மனிதநேச வாதிகள், புரட்சிகரக் கற்பனைவாதிகள், விமர்சன யதார்த்தவாதிகள் ஆகியோரது கலைப்படைப்பு முறைகளை இவர்கள் கிரகித்துக் கொண்டார்கள். சமூக அநீதிகளை விமர்சனம் செய்வதோடு நில்லாமல், சமூகத்தை மாற்றும் சக்திகளைக் கண்டு அதனோடு இணைந்து நின்றார்கள். இதுதான் புதிய மரபு. இதனால்தான் இவர்கள் சமூக அமைப்பை மக்கள் நலன்களுக்கேற்ற முறையிலும் மனித கெளரவத்தை உயர்த்தும் வகையிலும் மனிதனை மனிதன் சுரண்டும் வாய்ப்பில்லாமலும் மாற்றிவிட மக்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு மக்க ளுக்கு உத்வேகமூட்டுகிறார்கள். இவர்கள் இன்றைய மனிதனைச் சமூகச் சூழ்நிலையில் சித்தரிக்கிறார்கள்.

வரலாற்று வழிப்பட்ட புரட்சிகரமான வளர்ச்சிப் போக்கில் சமுதாய உண்மையை இவர்கள் கண்டு அதன் எல்லா அம்சங்களோடும், மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவுகளை முழுமையான சித்திரமாகத் தீட்டிக் காட்டுகிறார்கள்.

இவர்களுக்குக் கம்யூனிஸ்டுத் தத்துவத்தில் உறுதியான ஈடுபாடு உண்டு. மக்களுடைய நல்வாழ்வுப் போராட்டத்தில் அவர்களோடு வேறுபாடின்றி இவர்கள் ஈடுபடுகிறார்கள். எனவே, இன்றைய வர்க்கப் போராட்டத்தில் இவர்கள் முற்போக்கு வர்க்கச் சார்புடையவர்கள்.

இவர்களுடைய மனிதநேசம், கற்பனை மனிதனிடம் கொண்டுள்ள கழிவிரக்கமல்ல; போராடும் மனிதனோடு ஒன்றி நிற்பதாகும். இவர்கள் தேசபக்தியுடையவர்கள். ஆனால்,