பக்கம்:புது டயரி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது டயரி

3

 உள்ளவன்தான் உயர்ந்த சாதி, மற்றவர்களெல்லாம் தாழ்ந்தசாதி. அதனால்தான் தமிழுணர்வு என்ற மேல்சாதியைப் பற்றிச் சொன்னேன்.

தமிழுணர்வு இல்லாதவன் என்று சொன்னால் என்ன செய்வது?

இது யார் கண்ணில் படப்போகிறது? இது என்னுடைய பிரைவேட் டயரி. எனக்கே சொந்தம். வேறு யாரும் பார்க்கக்கூடாது; பார்க்கவும் அனுமதிக்கமாட்டேன். அப்படியிருக்க, இதைப்பற்றி யார் விமரிசனம் செய்யப் போகிறார்கள்? என்னுடைய தமிழ்ப் புலமையையும் தமிழுணர்வையும் வேறு பிரித்துப் பார்க்க, இது அகப்பட்டால்தானே? ‘சரி, மேலே எழுதுவோம்' என்று தொடங்கினேன்.

‘முருகன் திருவருளால்’ என்று எழுதி நிறுத்தினேன். முருகன் திருவருளால் இந்த டயரியைத் தவறாமல் எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தைக் குறிக்க நினைத்தேன். முருகன் திருவருள் மட்டும் போதுமா? நம்முடைய சொந்த முயற்சியும் வேண்டாமா? எனவே, ‘முருகன் திருவருளும் என்னுடைய இடைவிடாத முயற்சியும் கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த டயரியை எழுதுவதாக...’ என்று எழுதி நிறுத்தினேன். மேலே என்ன போடலாம்? எழுதுவதாக எண்ணியிருக்கிறேன் என்று போடலாம். எண்ணம் போதுமா? அதில் ஒரு திண்ணம் வேண்டாமா? எழுதுவதாகத் தீர்மானம் செய்கிறேன் என்று எழுதத்தோன்றியது. அது கூட அவ்வளவு அழுத்தமாகப் படவில்லை. ஒருவாறு யோசித்து, ‘எழுதுவதாக உறுதியை மேற்கொள்கிறேன்’ என்று எழுதி முடித்தேன். ஒரு வாக்கியம் முடிந்தது.

மேலே என்ன எழுதுவது என்று யோசித்தேன். அப்போது என் மனைவி வந்து குரல் கொடுத்தாள்; “இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/10&oldid=1149387" இலிருந்து மீள்விக்கப்பட்டது