பக்கம்:புது டயரி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோய்க்கு இடம் கொடு

41

 வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை; நல்லவனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதைப் பல சமயங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இப்போது நான் நல்ல இதயம் உள்ளவன் என்று சர்ட்டிபிகேட் கிடைத்துவிட்டதே! இதைக் கண்டு மகிழாமல் இருக்க முடியுமா? இந்தச் சோதனையும் அதன் விளைவினால் உண்டான மகிழ்ச்சியும் எப்படி வாய்த்தன? எல்லாம் இந்த நோயினால் தானே? ஆகவேதான் சொல்கிறேன், ‘நோய்க்கு இடங்கொடு’ என்று.

மருத்துவமனையில் இருந்த போது நான் எதிர்பாராதவர்களெல்லாம் வந்தார்கள்; பார்த்தார்கள்; ஆறுதல் சொன்னார்கள்; எத்தகைய உதவியானாலும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்குப் போன பிறகோ, பத்திரிகை மூலமாகத் தெரிந்து கொண்டவர்கள் பலர் வந்தார்கள். மேல் மாடியில் ஒய்வாகப் படுத்திருக்தேன். டாக்டரின் உத்தரவுப்படி வருகிறவர்களை ‘ரேஷன்’ பண்ணி அனுப்பினார்கள் வீட்டில் உள்ளவர்கள். அதனால் எனக்குச் சங்கடமாக இருந்தது.

வந்தவர்கள் எல்லாரும், “நீங்கள் நன்றாக ஒய்வெடுத்துக் கொள்ளவேண்டும்; வெளியூர்களுக்குப் போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று உபதேசித்தார்கள். ஒருவர் தம்முடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுத வேண்டுமென்று என்னிடம் கொடுத்திருந்தார். அவர் வந்தார். "நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாகப் பேசக்கூடாது; எழுதக் கூடாது” என்றார். “அப்படியே செய்ய முயல்கிறேன்” என்று சொன்னேன். அவர் எழுந்து போவார் என்று எண்ணினேன். ஆனால் தயங்கித் தயங்கி நின்றார், “ஏதாவது சொல்ல வேண்டுமோ?” என்று கேட்டேன். “ஒன்றும் இல்லை. நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை வற்புறுத்துகிறேன். நான் கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/48&oldid=1149566" இலிருந்து மீள்விக்கப்பட்டது