உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாணுக்கர்கட்கு மணிக்கணக்கில் பாடம் கற்பிப்பதிலும் அடிகளார் பொழுதைச் செலவிடுவர். மாணுக்கர் குழுவில் எளிய இளைஞர்களும் இருப்பர்; அரசாங்க உயர் அலுவலர் களும் இருப்பர். சொற்பொழிவாற்றும் நேரம்போக-பாடங் கற்பிக்கும் நேரம்போக-எஞ்சிய நேரங்களிலும் இடை யருது பலர் வந்து அடிகளாருடன் உரையாடிக்கொண் டிருப்பர். ஒவ்வோர் உரையாடலும் ஒரு பாடம் போலவே ஒரு சொற்பொழிவு போலவே சுவை மிக்கதாய்-பயன் நிரம் பியதாயிருக்கும். தமிழை அடிகளாரின் திருவாயிலிருந்து கேட்கவேண்டும். உரையாடும் போதும், வ ழு வ ற் றகொச்சையில்லாத செவ்விய இலக்கண நடையிலேயே அடிகளார் பேசுவர். இத்தகு பயன் செறிந்த உரையாடல் களும் பாடங்களும் சொற்பொழிவுகளும் திருப்பாதிரிப் புலியூரில் மட்டு மன்று - அடிகளார் செல்லும் ஊர்களில் எல்லாம் நடக்கும். ஓராண்டல்ல - ஈராண்டல்ல - தமது வாணுள் முழுதும் அடிகளார் இந்த அருட் பணியை ஆற்றி வந்தார்கள் . சைவமும் தமிழும் தழைக்க அடிகளார் பல ஊர்களில் தமது தலைமையில் பலகழகங்கள் தோற்றுவித்துள்ளார்கள். 1900-ஆம் ஆண்டு மடத்தில் வாணி விலாச சபை' அமைத்தார்கள்; பாலவநத்தம்சமீன்தார் பாண்டித்துரைத் தேவர் வாயிலாக மதுரையில் 24-5-1901-ஆம் நாள் 'தமிழ்ச்சங்கம் தோன்றச் செய்தார்கள்; சென்னை சைவ சித்தாந்த மகா சமாசம் 7-7-1905 ஆம் நாள் அடிகளாரால் தோற்றுவிக்கப் பட்டது. திருப்பாதிரிப்புலியூர் உட்படப் பலவிடங்களில் அடிகளார் மாநாடு நடத்திஞர்கள்; பல கழகங்களின் ஆண்டு விழாக்களுக்கும் வெள்ளி விழாக் களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை த ங் கி னு ர் க ள். இவற்றுள், சென்னை சைவ சித்தாந்த ச ம ச'த் தி ன் மாநாடுகள், திருப்பாதிரிப் புலியூர் ச் சைவப் பெரியார் மாநாடு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா,