பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&O பூர்ணசந்திரோதயம்-1 மேலே வரும்போதே, என்னுடைய சாமான்களையெல்லாம் ஐந்து நிமிஷத்தில் கட்டிவைக்கும்படி சொல்லிவிட்டு வந்தி ருக்கிறேன். இந்நேரம் எல்லாவற்றையும் கட்டி வண்டியில் ஏற்றியிருப்பார்கள். உன்னுடைய சாமான்களையெல்லாம் கட்ட இரண்டு வேலைக்காரிகள் வருவார்கள்; நான் ஏற்கெனவே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்' என்று கூறிய வண்ணம், அங்கே கிடந்த ஒரு நாற்காலியின்மேல் உட்கார்ந்துகொண்டார். அவர்அவ்வாறு பேசி வாய்மூடுமுன் இரண்டு வேலைக்காரிகள் மேலே வந்து சேர்ந்தார்கள். சில நிமிஷங்களில், அந்தச் சயன அறையிலும் ஸ்நான அறையிலும், மற்ற இடங்களிலும் பெட்டிகளும் பேழைகளும் பாய்களும் படுக்கைகளும் தட்டுமுட்டு சாமான்களும் தாறுமாறாக எடுத்துப் போடப் பட்டன. அந்த அவசரத்தில் எதை எடுப்பது, எதை விடுவது என்பதை உணராமல், வேலைக்காரிகளும், எஜமானியர்களும் அங்குமிங்கும் ஒடி நாட்டியமாடுகிறார்கள். பெட்டிகளிற் குள்ளிருந்த வஸ்துக்கள் எல்லாம் பிரயாணம் புறப்பட்டு விட்டன. வேலைக்காரிகளாவது, தனது புருஷராவது தற்செயலாக வெந்நீர் அண்டாவைத் திறந்து பார்த்து விடப் போகிறார்களோ என்ற அச்சத்தினால் தூண்டப்பட்டவளாய், அந்த அழகிய மங்கை, தனது ஆபரணங்களில் இருந்த ஒரு டிரங்குப்பெட்டியை எடுத்து வேண்டுமென்றே வெந்நீர் அண்டாவின்மேல் வைத்து அதற்குள் நகைகள் இருப்பதால், எவரும் அதைத் தொடவேண்டாமென்று சொல்லி வைத்தாள். தனது கள்ளப்புருஷரை அதிகநேரம் வெந்நீர் அண்டாவிற்குள் வைத்து வருத்தக்கூடாதென்ற நினைவினால் அந்த ஸ்திரீதனக்கு வேண்டிய ஆடையாபரணங்கள் சாமான்கள் முதலியவைகளை மிகவும் துரிதமாகவே பொறுக்கிப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டச் செய்து சகலமான முஸ்தீபுகளையும்.விரைவாகச் செய்து முடித்துக் கொண்டாள். சிறிதும் காலதாமதமின்றி உடனே புறப்பட்டு ஊரைவிட்டுப் போய்விட வேண்டுமென்ற உறுதியும் ஆவலும் கொண்டு