உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பெஞ்சமின் ஃபிராங்ளின்

வங்களையும், சுயேட்சையாக தான் இயங்க வேண்டிய வாழ்க்கை சூழலையும் விளக்கி தனது மாமாவுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

அக்கடிதம் கேப்டன் ஹோல்ம்சுக்கு சேரும்போது, பென்சில்வேனியா நகரின் ஆங்கிலக் கவர்னராக இருந்த சர் வில்லியம் கெய்த் என்பவரோடு பேசிக்கொண்டிருந்த நேரமாகும். அதனால் கவர்னருக்கும் பெஞ்சமின் விவரம் தெரிந்தது. அவர் தற்காரியங்களைச் செய்வதில் உணர்ச்சி வயப்படும் ஓர் இரக்க சுபாவமுடைய மனிதராவார்.

உடனே கவர்னர், முன்பின் எதுவும் யோசியாமல், பெஞ்சமின் வேலை செய்யும் சாமுவேல் கெய்மரின் அச்சகத்திற்குச் சென்றார். கவர்னரே தேடிக்கொண்டு வந்து விட்டாரே என்ற பரபரப்பு அச்சுக்கூடத்திலும், அக்கம் பக்கத்திலும் பரவியது. சாமுவேல் கெய்மர் ஒன்றும் புரியாமல் திகைத்தார்.

கவர்னருடன், அதிகாரிகளும், தளபதி பிரெஞ்சு என்ற நண்பரும் வந்தார்கள். அச்சகச் சீமான் கவர்னரை வரவேற்றபோது “உமது அச்சகத்தில் பணிபுரியும் ஃபிராங்ளின் என்பவரைப் பார்க்க வந்தேன், தயவு செய்து அவரை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கவர்னர் கூறினார்.

அவரும் உடன் பெஞ்சமினை அழைத்து வந்தார். கவர்னரும் பெஞ்சமினும் தேநீர் அருந்தும் ஒரு கடையுள் நுழைந்தார்கள்.

‘ஃபிராங்ளின், நீ சொந்தமாக ஒர் அச்சுக்கூடம் நடத்தி வருமானம் தேடலாமே அரசுக்கு ஏராளமான அச்சுப்பிரதிகள் தேவை இருக்கிறது. அதற்கு வேண்டிய உதவிகளையும் நான் செய்கிறேன்’ என்றார் கவர்னர்.

‘என்னிடம் அதற்கான பணம் இல்லை ஐயா’ என்று கூற, அதற்கு கவர்னர், ‘உனது தகப்பனார் உனக்கு வேண்