உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

கூளங்களை கூடையில் அள்ளியள்ளரிப் போட. சில கிழவிகளைக் கூலிக்கு நியமித்தார் பெஞ்சமின்.

அவ்வாறு குவிந்த அந்தக் குப்பைகளை ஒரு குதிரை கட்டிய வண்டியில் கிழவிகளை அள்ளிக் கொட்டச் செய்தார். அந்த குதிரை வண்டியிலே குப்பைகளை ஏற்றி, நகரத் தெருக்களைத் தாண்டி ஓரிடத்தில் கொட்டுமாறு பள்ளங்களை உருவாக்கம் செய்தார்!

இப்போது, தெருவில் குவிந்த குப்பைக் கூளங்கள் எல்லாம் குதிரை வண்டிகள் மூலம் அகற்றப்பட்டன. வீதி சாக்கடையில் சேரும் சாக்கடைச் சேறுகளை, வீதிகள் ஓரங்களிலே, நாற்றமில்லாதவாறு தெருக்கூட்டிகள் ஆங்காங்கே கரைமேல் சேர்த்துக் குவிக்க, குவிந்த குப்பைக் கூளச்சேறுகளை எல்லாம் கூடையிலே வாரி, குதிரை வண்டியிலே கொட்ட அந்த வண்டிகள் ஊருக்கு வெளியே உள்ள பள்ளங்களில் அவற்றைக் கொட்டி மண் மூடச் செய்யும் பழக்கத்தை முதன் முதலில் உருவாக்கிக் காட்டித் திட்டம் வகுத்துச் செயல்படுத்திய மாமனிதர் பெஞ்சமின் ஃபிராங்ளின்தான். எவ்வளவு பெரிய மக்கள் நல்வாழ்வுப் பணி பார்த்தீர்களா?

இன்னும் தமது நகரில் நடக்கும். இந்த நகராட்சி சுகாதாரப் பணிகள் மிக மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இப்படி ஒரு சுகாதார முறை ஒன்றை உருவாக்கி செயல்படுத்திக் காட்டியவர் யார்? பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற இந்த ஒரு மாதரண மனிதர் அல்லவா?

பிலடெல்பியா பட்டின நகரின், தெருக்கள் எல்லாம், சந்தைப் பேட்டை நடைமேடை தளவரிசை போல ஆவதற்குரிய சிந்தனையாளராக அதைச் செயல்படுத்தும் முதல் செயல் வீரராகவும் திகழ்ந்தவர் ஃபிராங்ளின், இவருக்கு முன்பு இப்படி யாரும் செய்யவில்லை.