உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47

மூக்குக் கண்ணாடியை கண்டு பிடித்தவர்

பெஞ்சமின் முதுமையின் சிகரத்துக்கு ஏறும் படிக்கட்டுகளிலே ஏறினார். ஒன்றிரண்டு என்று வயது படிகளைத் தாண்டிக் கொண்டே வரும்போது, அவருடைய கண் பார்வையின் ஒளி குறைந்தது-மங்கியது. அதனால், மூதறிஞரான அவர், ஒவ்வொரு கிழவனுக்கும், இரண்டு ஜோடி மூக்குக் கண்ணாடிகள் தேவை என்பதை ஆராய்ந்து அறிவித்தார்.

ஏன் இரண்டு வகை மூக்குக் கண்ணாடிகள்?

ஒரு கண்ணாடி படிப்பதற்கு மட்டுமே தேவை. அது மட்டுமல்ல, கண் அருகே என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமோ அதற்காகவும், கண்ணருகே எதை யெதை நேருக்கு நேர் பார்க்க வேண்டுமோ அதற்காகவும், கிட்டப் பார்வைக் காட்சிகள் எல்லாம். நன்றாக, நல்லபடியாக, முழுமையாகத் தெரியவும் ஒரு கண்ணாடி அவசியம் தேவை என்று உணர்ந்தார்.

அருகே உள்ள பார்வைக்கு ஒரு கண்ணாடி தேவைப்படுவதைப் போல, எங்காவது தூரமாகப் போகும்போது துாரப்பார்வைக்கும் ஒரு மூக்குக் கண்ணாடி தேவை என்கிறார் பெஞ்சமின்.

எங்கே போனாலும் இரண்டு மூக்குக் கண்ணாடிகளை எடுத்துக் கொண்டு திரியும் நிலை அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் என்ன செய்யலாம் என்று அவர் சிந்தித்தவாறே இருந்தார்.

திடீரென வந்த சிந்தனையால் அவர் மூக்குக் கண்ணாடி லென்சுகள் செய்பவர்களிடம் சென்று, தனது பார்வைக் கோளாறுகளைக் கூறினார். அதனால் தான்படும் தொல்லைகளை எடுத்துச் சொல்லி அந்த லென்ஸ்காரரிடம்