14 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா o நம்மை ஏற் நிச் செஇத்தான் ក្T அந்தக் காரையே நாம் தினந்தோறும் தள்ளிக் கொண்டே சென்றால், வாங்கியதற்கு என்ன பயன்? வழியில் பார்ப் போர் என்ன நினைப் பார்? கேவலம் தானே! நாகரிகமும் இப் படித் தான், நம் ைம நலியவைக் கும். நாசமாக்கும் நாகரிகம் நமக் குத் தேவையில்லை. உடலில், உணவில், நடையில், செயலில் வரும் மாற்றம், நம்மை முன்னோக்கி, பெருமை தரும் போக்கிலே நடத்திச் செல்ல வேண்டும். அந்த முறைகளையே எல்லோரும் பின்பற்ற வேண்டும். அதுதான் நியாயமான வாழ்க்கை. ஆகவே, வாழ்ந்திருக்கும் காலம் வரை, நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று நோக்கத்தோடு வாழ வேண்டும். உணவால், உடையால், பழக்க வழக்த்தால், நாம் எதிர் காலத்தில் , அதாவது வயது ஆக, ஆக, முதுமை பெறும் காலத்தில், உடலுக்கு ஊறு எதுவும் இன்றி வாழ வேண்டும் என்ற கவனத்தோடுதான், நாம் வாழ்வை நடத்த வேண்டும். சுவற்றை வைத்துத் தான் சித்திரம் என்பார்கள். அழகான உடல் இருந்தால் தான், ஆடை அலங்காரம் நன்றாக இருக்கும். அங்க அசைவுகள் சிறப்பாக இருக்கும். அருகில் உள்ளவர்களும் நம்மை ஆவலோடு பார்ப் பார்கள். தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய தன்னம் பிக்கை ஏற்படும். ஆகவே, பேரழகையும் பெருமைக் குரிய வாழ் வையும் தரக் கூடிய ஒரே ஒரு துணை உடலழகுப் பயிற்சிகளே!
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/16
Appearance