உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொங்கற்பரிசு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கதிர் வாழ்த்துவோம்!


வானெல்லாம் ஒளிபொங்க,

மலையெல்லாம் இசைபொங்க,
மலையின் சாரற்
கானெல்லாம் ஒலிபொங்கக்,
காட்டாற்றில் நீர்பொங்கக்,
காட்டுப் பூக்கள்
தேனெல்லாம் கால்பொங்கச்,
செழுமருதம் வளம்பொங்கத்,
திண்தோள் வீரர்
ஊனெல்லாம் களிபொங்கக்
கீழ்வானில் உயர்ந்த கதிர்
வாழ்த்து வோமே!

1


காடெல்லாம் பூத்திருக்கக்,

கனிமரங்கள் பழுத்திருக்கக்,
கரும்பு பூக்க,
மாடெல்லாம் கொழுத்திருக்க,
வயலெல்லாம் விளைந்திருக்க,
வயலைச் சார்ந்த
வீடெல்லாம் களித்திருக்க,
வேல்விழியார் கனிவாயிற்
பொங்க லோசை
காடெல்லாம் பூத்திருக்க
வந்ததை நன்னாளை
வாழ்த்து வோமே!

2

7
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/15&oldid=1148986" இலிருந்து மீள்விக்கப்பட்டது