இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொற்சுடர்! வாழிய! நம்
வீட்டிற் கண்டனம் விளைவெலாம்!
வயலிடை கல்லுழவர்
பாட்டிற் கண்டனம் பண்ணிசை!
தோள்வலி! இளஞ்சிறர்வாய்ப்
பாட்டிற் கண்டனம் தைமுதற்
1
வாழிய விரிகடல்சூழ்
மண்ணிற் கண்டனம் செழுமையும்
வளமையும்! வார்புனல்பாய்
பண்ணிற் கண்டனம் பாவையர்
தீந்தமிழ்! நற்றமிழர்
கண்ணிற் கண்டனம் தைமுதற்,
2
எங்குமே மலர்க்கூட்டம்
மேட்டிற் கண்டனம் பைம்புதர்
மேலெல்லாம் ஒளிவீச்சு!
கூட்டிற் கண்டனம் குருவியின்
பாடலும் தாய்ப்பற்றும் !
ஏட்டிற் கண்டனம் தைமுதற்
3