உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் 10 முதல் 1 மணி வரை அறிக்கை தயார் செய்தல், கடிதம் எழுதுதல் முதலியன. 1-30 மணிக்கு பகல் உணவு, வெந்த கீரை, காய்கள், பழங்கள், ஆட்டுப்பால், வேர்க்கடலை இவைதான். அதன் பின் 2-30 மணிவரை ஒய்வு. 3 மணி வரை ராட்டையில் நூற்றுக் கொண்டே தம்மைக் காண வந்தவர்களுக்குப் பேட்டி அளிப்பார். பேட்டிகளுக்குக் கொடுக்கப் பட்ட நேரத்தை மிகக் கவனத்துடன் அநுசரிப் பார். ஒரு நிமிஷம் முன் பின் போகாது. மாலை உணவை 5 மணிக்கே முடித்துக் கொள்வார். அஸ்தமித்த பிறகு எதுவும் சாப்பிடுவ தில்லை. 6 மணி வரை சிறிது தூரம் உலாவி விட்டு வருவார். 6 மணிக்கு மாலைப் பிரார்த்தனை. காலைப் பி ரா ர் த் த ைன ஆசிரமத்திலுள்ளவர்களுக்கு மட்டும்தான். மாலைப் பிரார்த்தனையில் பொது மக்கள் கலந்து கொள்ளலாம். 7 மணி முதல் 8 மணி வரை முக்கிய அலுவல் கள் மட்டும் கவனிக்கப்படும். துங்கப் போகும் முன் ஆசிரமத்து ஏற்பாடுகள், கணக்குகள் பற்றி விசாரிப்பார். ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குக் கேட்பார். கடைசியாகத் துளசி மணி மாலையை உருட்டிக் கொண்டே ராமஜெபம் செய்து தூங்கி விடுவார்.