பக்கம்:மகான் குரு நானக்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மகான் குருநானக்


என் ஆன்மாவின் வளத்துக்குரிய ஆதாரமாக அமைந்துள்ளது" என்றார் நானக்.

என்ன கூறுகிறான் மகனென்று தந்தைக்குப் புரியவில்லை. விவசாயத் தொழில் அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ, ஏதேதோ வாதம் பேசி நம்மைத் தட்டிக் கழிக்கிறான் மகன் என்று எண்ணிக் கொண்டார் தந்தை.

ஒருவேளை மகன் வியாபாரத் தொழிலிலாவது விருப்பம் காட்டுவானாவென்று எண்ணிய தந்தை 'நானக் கடை வைத்துக் கொடுக்கட்டுமா? வியாபாரமாவது செய்கிறாயா?' என்று கேட்டார்.

'அப்பா, எனது உடல் ஒரு கடிை அதில் தெய்வீகம் எனும் சாமான்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். அந்தக் கடையிலே இருந்து உண்மை' எனும் செல்வத்தை வருமானமாகப் பெறுகிறேன் என்றார் நானக் தந்தையிடம்.

நாம், கேட்டதற்கு நானக் ஏதேதோ பதில் கூறுகிறானே என்று நினைத்தாரே தவிர, என்ன சொல்கிறான் தனது மகன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவரால் 'குதிரை வாணிகம் செய்கிறாயா மகனே?' என்று கேட்டார் தந்தை!

குதிரை வியாபாரமா? நான் என்ன அரேபியனா? என்று கேட்கவில்லை நானக், தன் தந்தையை "உண்மை என்பதுதான் குதிரை அந்தக் குதிரையை விற்பவன்தான் உண்மையான வாணிகன் அந்த உண்மை என்ன ஊதியம் தரும் தெரியுமா அப்பா? நற்குணம் என்ற வருவாய் தான் அது. இறைவனை அடைவதற்கு வழி அதுதான்' என்று நானக் தந்தையிடம் கூறினார். 'சரி எதுவும் வேண்டாம் உனக்கு அரசு பணி ஏதாவது செய்கிறாயா நானக்?' என்று கேட்டார் தந்தை!

"அப்பா, இறைவன் ஒருவனே என் தலைவன். அவனைப் பணிந்து இறை ஊழியம் செய்வதே எனது தொழில். கடவுளின் பார்வை பெறுவதுதான் எனக்குப் பேரின்பம். நான் பெறுகின்ற