莒兹
இழிந்தது வாங்குவதற்காக நீட்டப்படும் கை. ஈயென இரத்தல் இழிந்தன்று' என்று புறநானூறு கூறுகின்றது.
ஆனால், கையிருந்தும் கையின் பயனை அறியாத கோடிக் கணக்கான முடவர்களிடையே, மக்கள் திலகம் ஒருவரே கையராக பெருந்தகையராக, அனைத்துயிர் உள்ளங்களிலும் அமர்ந்திருக்கிறார் என்பது, கிழக்கில் உதிப்பது சூரியன் என்ற கூற்றைப் போல மாற்ற முடியாத, மறுக்க இயலாத உண்மை.
எல்லோருக்கும் இதயம் கையளவாக உடம்பினுள் இருக்கையில், பொன்மனச் செம்மல் மட்டும் உடம்பே இதயமாகப் பிறந்து விட்டவர். இவரைப் பற்றி ஒரு நூல் என்ன, ஒராயிரம் நூற்கள் எழுதலாம்.
ஒரு புலவனின் பேனா எப்போது துள்ளி ஒடும்? ஒரு கொடை வள்ளலின் குணங்களைப் புகழ்ந்து கூற அமரும்போது, அவனது பேனா அனாயாசமாகத் துள்ளிச் சுழலும். இதனை உண்மை என்கிறது எனது ஆருயிர் நண்பர் புலவர் என்.வி. கலைமணி எழுதியுள்ள 'மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். என்ற நூல்.
'என்றும் இழியாதென் பாட்டு’ என்று ஒளவை மார் தட்டியதுபோல, என்றும் அழியாத எண்ணக் கோவிலை எழுப்பி, அதில் உள்ளுரை தெய்வமாக எம்.ஜி.ஆரை அமர்த்தியுள்ளார் ஆசிரியர். கோவில் என்றால் கொடியேற்றம் உண்டே! கொள்ளை கொள்ளும் தமிழில் கொடியேற்றம் செய்து விட்டு, கோவிலுக்குள்ளே சுற்றிக் காட்டுகிறார் புலவர். கோவிலுக்குள்ளே அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கருவரைக் கோயில் போன்றவை இருக்குமல்லவா? இதே புலவர் அரசாங்கம் அரங்கமாகச் சுட்டிக்காட்டி நம்மை அழைத்துச் செல்கின்றார்.
இந்தக் கோயிலில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது அரசியல் அரங்கம். அதனை ஒட்டிக் கருத்தைக் கவரும் கவின்மிகு கலையரங்கம். அடே! காட்சிக் கெளியராக வாழ்ந்த வரைக் காண இதோ வந்து விட்டோமே கருவறைக்குள். இதோ!