உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதன கல்யாணி-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33 அதைக் கண்ட ஜெமீந்தார் அவளது உண்மையான தேகஸ்திதி இன்னதென்பதை அறிந்து கொண்டவராய், அதற்கு மேல் அன்றைய மாலை வரையில் அவளிடத்தில் தாம் பேச்சுக் கொடுக்கக் கூடாதென்று உறுதி செய்து கொண்டார். ஆனால், அவள் சொன்ன புதிய விஷயத்தைக் கேட்ட முதல் அவரும், மதன கோபாலனும் அடக்க இயலாத ஆவல் கொண்டவர்களாய், மற்ற சங்கதிகளையும் அவள் எப்போது சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்தவர்களாக இருந்தனர். கல்யாணியம்மாளது வயிற்றில் பிறந்த உண்மையான மகன் எங்கே இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலே பெரிதாக எழுந்து அவர்களை வதைக்கத் தொடங்கியது. அவள் மறுபடியும் எப்போது விழிக்கப் போகிறாள் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது கண்ணயர்ந்து படுத்தவள் அன்றைய தினம் காலை ஏழு மணிக்கே தெளிவடைந்து விழித்தாள். அவளுக்கு உடனே மருந்து ஆகாரம் முதலியவை கொடுக்கப் பட்டபின், காலையில் இருந்தது போல, அவர்கள் மூவரும் அந்த இடத்தில் தனியாக இருந்தனர். அப்போது, அவள் மறுபடியும் மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கினவளாய், "இப்ப எனக்கு நல்லா சவுக்கியம் ஆயிப்போச்சு; எனக்கு உத்தரவுதானா?" என்றாள். - - அதைக் கேட்ட ஜெமீந்தார், "கிழவி! அவசரப்படாதே. உன்னுடைய உடம்பு இன்னும் சரியான நிலைமைக்கு வரவில்லை. நீ காலையில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தவள். இப்போது தான் எழுந்திருந்தாய். இந்த உடம்போடு நீ இந்த ராத்திரியில் போனால், எங்கேயாவது விழுந்து கிடக்கப் போகிறாய். ஆகையால், இன்று ராத்திரி முழுதும் இங்கேயே இருந்துவிட்டு நாளைய காலையில் போகலாம்; உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டிரு; நீ சொல்லுகிற சங்கதி பதினெட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்த சங்கதி; அதை எட்டு நாளைக்குள் எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறாய்? கல்யாணியம்மாளுடைய நிஜமான பிள்ளையைத் திருடியது யார் என்பதைக் கண்டுபிடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/37&oldid=853434" இலிருந்து மீள்விக்கப்பட்டது