பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

221


2. ‘ஆய்வளை கல்லாய்! இது நகை யாகின்றே

மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்;
வருமாயின் வேலன் மடவன்; அவனின்
குருகுபெயர்க்குன்றம் கொன்றான் மடவன்’

3. ‘செறிவளைக் கை நல்லாய்! இது நகையாகின்றே

வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்க வரும் வேலன்;
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்’.

4. ‘நேரிழை நல்லாய்! நகையாம் மலைநாடன்

மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்;
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான்மடவன்
கார்க் கடப்பக் தார் எம:::வுள் வருமாயின்’.

இவை பாடல் பகுதிகள். தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை முற்றும் (கரைத்துக் குடித்துக்) கற்றவராகக் காணப்படுகிறார் ஆசிரியர் இளங்கோ.

மேலும் தலைவி கூறுகிறாள்:

1. நில மயில் மேல் வள்ளியோடும் முருகன்வரின், மலை நாடராகிய என் காதலரோடு என்னை மணம் முடிக்க அருள் புரிக என்று வேண்டுவோம். 2. மலைமகள் மகனாகிய முருகன் வரின், அவனையும் அவன் துணைவி குறமகள் வள்ளியையும் தொழுது, அயலாருக்கு என்னை மணம் முடிக்கச் செய்யாமல், என் காதலருக்கே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம். 3. மலைமகள் உமையின் மகனாகிய முருகன் வரின், அவனையும், அவன் மனைவியாகிய எம் குறக் குலத்து வள்ளியையும் தொழுது, பலரும் அறியும்படியாக என் காதலருடன் என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம். 4. குறமகளும் எம் குலத்து மகளும் ஆகிய வள்ளியையும் முருகனையும் தொழுது, பிழைபட வேறொருவர்க்கு என்னை மணம் முடிக்காமல்,