உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஒவண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர் எதையும் ஆட் சேபிக்கவில்லை. அன்று முதல் அவர் அதிகமான உற்சாகம் கொண்டவ ராகவே தோன்றினார். அவருள் ஒரு பரவசம் புகுந்து விட்டது போலிருந்தது. உள்ளக் கிளுகிளுப்பும் உணர்ச்சிப் பரவசமும் கொண்டவராய், அவர் சத மோகினி சிலை யைப் பார்த்து மகிழ்ந்து போனார். இரவு வேளைகளில் விழித்தெழுந்தால், ஸ்விட்சைத் தட்டி விளக்கில் ஒளிவரச் செய்து, வெளிச்சத்தில் குளித்து நிற்கும் மோகினியைக் கண்குளிரக் கண்டு விட்டுத்தான் மீண்டும் துரங்கமுயல்வார். உடனேயே துரக்கம் வந்து விடுமா? சுந்தகி களுக்கெனச் சிரிப்பது போல்கூட அவர் உணர்வு அவரை ஏமாற்றும். பிரமைதான். இப்போதும் அப்படி ஒரு பிரமைதான் அவரோடு விளை பாடியிருக்கிறது! இதை எண்ணவும் அவர்தனக்குள் சிரித்துக் கொண்டார். சோம்பலும் சுகவிருப்பமும் அவரை நாற்காலியில் செளகரியமாகச் சாய்ந்து, படுத்துக்கிடப்பது போல் ஒடுக்க முறத் தூண்டின. சிலையை பார்த்தவாறு சாய்ந்து கிடந்தார் அவர். விழிப்பின் பிரக்ஞையும் தூக்கக் கிறக்கமும் தழுவிக் குழம்பி மயக்கம் உண்டாக்கும் நிலை. நினைவின் நிழல்கள் போலும் கனவின் சாயைகள் போலும் கண்ணுக்குள் உரு வங்கள் அசைந்தாடும் நிலை. எங்கோ எழும் ஒலிகளின் தேய்ந்த அலைகள் போலவும், கனவில் கேட்கும் குரல்கள் போலவும் காதருகில் ஏதேதோ குழம்புகின்ற நிலை... பெண் ஒருத்தி பெரும் சிரிப்பு சிரித்தது போல் தோன்றி யது. என்ன, அதுக்குள்ளே தூக்கமா?’ என்று மெல்லிய குரலில் கேட்பது போலவும் இருந்தது. பாதசரம் இசை ம-3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/39&oldid=855541" இலிருந்து மீள்விக்கப்பட்டது