விளையாட்டுப் பெண் 31 சரி சரி. நான் போறேன்!” என்று கூறி, அவன் கன்னத்தைச் செல்லமாக வருடிவிட்டு, சிரித்துக்கொண்டே வாசல்பக்கம் ஒடிப்போளுள் அவள். அப்பொழுது வீட்டுக்குள் நுழைந்த பாலுவின்மீது முட்டிக்கொண்டாள். என்ன அத்தை, பார்த்து வரக்கூடாது? கண்ணே மூடிக் கிட்டே டான்ஸ் பண்ணி வந்தையாக்கும்?' என்று கேட்டான் அவன். அண்ணனைப்போல் சங்கோஜி அல்ல தம்பி. பேச்சிலும் படபடப்பு அதிகம்தான். "நீ வேகமா வந்து முட்டிவிட்டு, பேச்சைத் திருப்புநிகே நல்லாருக்கு வேடிக்கை!" என்று அத்தை சிரித்தான். வேகமாக வெளியேறினுள். - - அவள் போனபின், இந்த அத்தை ரொம்ப மோசம்: என்று அண்ணனிடம் அபிப்பிராயம் அறிவித்தான் தம்பி. அவன் எதற்காக அப்படிச் சொல்கிருன் என்பதை விளங்கிக்கொள்ள முடியாதவளுய், சேது விழித்தான். 'ஏன், என்ன விஷயம்?’ என்று கேட்டான். கல்யாணி டீச்சர் வீட்டிலே போய்த்தான் இவள் கற்றுக்கொள்கிருள். படிப்பு என்னமோ தினசரி ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் தான் இருக்கும். ஆளுல் இவள் அந்த வீட்டிலே ரொம்ப நேரம் தங்குரு. . .' 'ஊம். அதுளுலே?" கல்யாணி டீச்சர் வீட்டுக்கு வந்து சேருவதற்கு எவ்வளவோ நேரம் முந்திக்கூட்டியே இவ அங்கே போகிரு ..." - - தம்பி எதையோ சுற்றி வளைத்துச் சொல்கிருன் என்று மட்டுமே புரிந்துகொண்ட சேது, போகட்டுமே, அதிலே என்ன தப்பு?’ என்ருன். அந்த டீச்சருக்கு செல்வராஜ் என்ருெரு தம்பி இருக் கான். வேலை எதுவும் செய்யாத உல்லாச மைனர். அவன் அக்கா வீட்டோடு தான் இருக்கான்...”
பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/30
Appearance