பதிப்புரை சிழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் அவர்களின் படைப்புகள் ஏராளம். அவற்றுள் இதழ்களில் வெளிவந்து தொகுப்பு நூல்களில் இடம் பெருதவை பல. அவற்றைச் சுவைக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறையினருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வேட்கையோடு திரு. வல்லிக்கண்ணன் அவர்களே அணுகி இந்நூலில் அடங்கும் மூன்று குறு: நாவல்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்களின் நல்லாசிகளோடு இந்நூலினை வெளிக்கொணர்கிருேம். கிடந்த அரை நூற்ருண்டுக் காலமாகப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களிடம் தம்முடைய எழுத்துக்களின் பொருள் பொதிந்த உரையாடல்களின்மூலம் முற்போக்குச் சிந்தனைக்கு வளம்கூட்டி வருபவர் திரு. வல்லிக்கண்ணன் என்பதை யாவரும் அறிவர். சிழுத்துச் செல்வரின் 71ஆவது பிறந்த நாள் நிறைவின் போது இந்நூலை வெளிக்கொணர்வதில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் பெருமிதம் அடைகின்றது. நாங்கள் நடத்திவரும் இலக்கிய நண்பர் வட்டத்திற்கு உறுதுணையாக விளங்கிவரும் மூத்த எழுத்தாளர்களுள் முதல்வராகத் திகழ்வதோடு ஆண்டுதோறும் க ரு த் தர ங் கு களி ல் கலந்துகொண்டு சிறப்புரைகள் வழங்கிவரும் திரு. வல்லிக்கண்ணன் அவர் களின் இலக்கியப்பணி மேலும் பல்லாண்டுகாலம் சிறந் தோங்க அவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிருேம். அத்துடன் இந்நூலினை உருவாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்தி, ஊக்குவித்த முற்போக்கு द्यू
பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/7
Appearance