உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மலருக்கு மது ஊட்டிய வண்டு

42 மலருக்கு மது ஊட்டிய வண்டு

-அந்த மாணிக்கத்தை இனி, நான் எங்கு காண் பேன்-சோர்ந்து போன அவள், டிக்கெட்டைக் கேட்! டில் கொடுத்துவிட்டு, தன்னுடைய கிராமத்தை நோக்கிச் செல்லும் கப்பிரஸ்தாவில் இறங்கி நடந்தாள்.

வழி முழுவதும் அவள் உள்ளத்தில் ஒரே கேள்வி

ஆரம்பத்திலிருந்து என்னிடம் ஒர் துர் எண்ணத்துட னேயே பழகத் தொடங்கியவர், பின்னர் எப்படி என்னைத் திண்டக்கூட மனம் இல்லாதவராக-எனக்காக டிக் கெட்டையும் வாங்கி வைத்துவிட்டு, சொல்லாமல் செல்ல வேண்டும்?

நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு -அந்த டி-டி.இ.யின் உள்ளம்-அவரது மாறுதலுக்குக் காரணம்-இப்படித் சிான் இருக்க வேண்டுமென்று அவளுக்குப் புரிந்தது.

-ஒரு நிர்ப்பந்தத்திலிருந்து மீள அல்லது விடுபட வேறு வழியற்று மனமொடிந்த நிலையில் தன்னை அர்ப் பணித்த எனது சரணாகதி'யைப் பயன்படுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லையோ? ஏதோ ஒரு பலவீனமான மனோ நிலையில்-அவர் செய்யத் துணிந்தவற்றைநான் கூறிய வாழ்க்கைக் கதைதான் என்னுடைய தரத்தை விளக்கி, அவரது எண்ணத்தை மாற்றி விட்டதோ?

-அவளுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது.

ஆம்! இத்தனை காலம் அவள் தன்னுள் போற்றிக் காத்துவரும் அது’-பெண்மைக்கோர் பொக்கிஷமான அந்த 'அது' எத்தனை மகத்தானது, "சக்தி வாய்ந்தது, சத்தியமானது' என்பதை எண்ணியபடி பெருமிதத்துட னேயே தன் அன்னையைக் காண விரைந்தாள்.

-ஆனந்த விகடன்