உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோசை நல்ல தோசை - அம்மா சுட்டுத் தந்த தோசை. ஆசை யாக எனக்கே - என் அம்மா தந்த தோசை. வட்ட மான தோசை - அது மாவில் சுட்ட தோசை. தட்டு நிறைய நிறைய அம்மா சுட்டுத் தந்த தோசை. காசு கேட்க வில்லை - என்னைக் காக்க வைக்க வில்லை. தோசை வேணும் என்றேன் - அம்மா சுட்டுச் சுட்டுத் தந்தாள். ஒன்று, இரண்டு, மூன்று - என்றே உள்ளே பிய்த்துப் போட்டேன். இன்னும் ஒன்று, ஒன்று - என்றே எடுத்து, எடுத்து வைத்தாள். 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/46&oldid=860101" இலிருந்து மீள்விக்கப்பட்டது