இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25
வேடங்கள் பொய்யா?
வேடத்தில் வெளிப்படும் வினைகள் பொய்யா?
என்ற கேள்விகளை எழுப்புகிறார் கவிஞர்.
- 'புனைவுகள்'
- புனைந்த பின்னரோ புதுவித நினைவுகள்
புனைந்த முகங்கள்
புனைவுக்குள்ளே
புகுந்து
சிக்கி
புன்னகைக்குள்ளே புலம்பிய போதும்
கடைக் கண் நடிப்பில்
கண்ணீர்த்துளிகள் கவரப்பட்டதை ::அறியா வெறியில்
அலறிச் சிரிப்பதும்
அழுது வெடிப்பதும்
வேடங்கள் பெற்ற வெற்றி அல்லவோ?
இந்தச் சிந்தனையின் மீது கவி ஒரு முடிவுக்கு வருகிறார்.
வேடங்கள் பொய்யல்ல
வேடத்தில் வெளிப்படும் வினைகள் ::தாம் பொய்
வேடங்கள் பொய்யெனில்
வேடம் புனைந்த
வேந்தன் பொய்யா?
வேலன் புனைந்த
வேந்தன் பொய்யா?
தர்க்கிக்கும் கேள்விகள் ஒருதெளிவுக்கு இட்டுச் செல்கின்றன.