இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
"ஏதேனும் ஓர் உறுப்பின் பெயரே சினைப் பெயராம்."
குணப்பெயர்:-
நன்மை, தீமை, வெண்மை-இவை பெயர்ச் சொற்களே. இவை குணத்தைக் காட்டுவதால் குணப்பெயர்.
"ஏதேனும் ஓர் குணத்தின் பெயரே குணப் பெயராம்."
தொழிற்பெயர்:-
படித்தல், நடக்கை, கல்வி-இவைகளும் பெயர்ச் சொற்களே. இவை தொழிலைக் காட்டுவதால் தொழிற்பெயர்.
"ஏதேனும் ஒரு தொழிலைக் குறிப்பதே தொழிற் பெயராம்."
"பொருட்பெயர், இடப்பெயர், காலப் பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்று பெயர் அறுவகைப்படும்.”
பயிற்சி
1. பெயர்ச் சொல் என்றால் என்ன?
2. பெயர் எத்தனை வகைப்படும்? எவை?
3. பொருட் பெயரென்றால் என்ன?
4. இடப் பெயர் என்றால் என்ன?
5. காலப் பெயர் என்றால் என்ன?