பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மாதவம் புரிவாள் "குளிர்மணற் கேணியில் கொம்பினர் படர்ந்தும்' திவ்யப் பிரபந்தம் "கொம்பனார்க் கெலாம் கொழுந்தே-' எனவே, திருமால் கொம்பர் என்பது, திருமாலின் மனைவியாகிய திருமகளைக் குறிக்கும். இப்பெயர் இடப் பொருள் (தானி) ஆகுபெயராய்த் தாமரையைக் குறிக்கும். இடத்தில் உள்ள பொருள் இடப் பொருள் - தானத்தில் உள்ளது தானி. தானமாகிய தாமரையில் இருக்கும் தானிஇடப்பொருள் திருமகள் ஆவாள். அந்த இடப்பொருளின் பெயர் இடமாகிய தாமரைக்கு ஆயிற்று - தானி தானத் திற்கு ஆகி வருவது தானியாகுபெயர். 1.6 திருமாலும் தாமரையும் திருமால் சார்பாகத் தாமரைக்குத் திருமால் கொப்பூழ் (நி.), மாலுந்தி (நி), மாலின் நேத்திரம் (சா.சி.பி.), இராமப் பிரியம் (சா.சி.பி.) என்னும் பெயர்கள் ஏற்பட்டுள்ளன. 1.6.1.2 கொப்பூழ்-உந்தி திருமாலின் கொப்பூழ் (உந்தி) தாமரை வடிவின தாதலின், தாமரைக்குத் திருமால் கொப்பூழ், மாலுந்தி (மால் + உந்தி) என்னும் பெயர்கள் ஏற்பட்டன. 1.6.3 மாலின் கேத்திரம் நேத்திரம் = கண். திருமாலின் கண்ணும் தாமரை வடிவினது. ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவனை பூசனை செய்து வருகையில், ஆயிரமாவது தாமரை மலர் குறைய, திருமால் தம் ஒரு கண்ணைத் தோண்டிச் சிவனடியில் இட்டுப் பூசனையை முடித்தார் என்பது புராண வரலாறு, தாமரைக் கண்ணான் உலகு" என்னும் திருக்குறள் பகுதியும், கமலக் கண்ணன், செந்தாமரைக் கண்ணன் என்னும் உலக வழக்குப் பெயர்களும் ஈண்டு