பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மர் தவம் புரிவாள் எல் (ஒளி) உடைமையால் ஞாயிறுக்கு எலி, எல்லி, எல்லவன்- என்னும் பெயர்கட் ஈயப்பட்டன. இ.சா. திருமுருகாற்றுப்படை. எல்: "கள்கமழ் நெய்தல் ஊதி எல்பட' (எல் = ஞாயிறு) கண்டோல் மலர்ந்த காமரு சுனைமலர் (74, 75) எல்லி = சூரியன் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. எல்லவன்: (பாரதம்-பதினெட்-119) "எல்லவன் வீடு முன்னம்' மனை என்றால் மனைவி. இ. சா: பிறன்மனை நோக்காத பேராண்மை' (குறள்-148) எலியின் (எல்லியின்) மனைவி தாமரையாகும். தாமரை யின் கணவன் ஞாயிறு என இலக்கியம் பேசுகிறது. அதைக் கொண்டு ஞாயிறின் மனைவி தாமரை எனக் கொண்டு எலி மனை' எனச் சா.சி.பி. அகர முதலியும், எல்லி மனை' எனப் பொருட்பண்பு நூலும் பெயர்கள் தந்துவிட்டன. 18.3 தாமரை நாயகன் ஈண்டு இந்தக் கணவன்-மனைவி உறவுமுறை பற்றி ஒரு சிறிது ஆய்வு செய்ய வேண்டும்; பின்னர் உண்மை விளங்கும். பொதுவாக, மலரை மனைவியாகவும், ஞாயிறு (சூரியன்) அல்லது திங்களைக் (சந்திரனைக்) கணவனாகவும் உருவகித்துப் பாடுவது ஒருவகை இலக்கிய மரபாகும். காட்டாக, சூரியகாந்தி மலரை நோக்கி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியிருப்பது வருமாறு: மலரும் மாலையும்-சூரியகாந்தி (49) ஆகாயவிதி உலாவிவரும் இந்த ஆதித்தனோ உனது அன்பனடி!'