பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ம்ா தவம் புரிவாள் என்று நான்முகனையும், சொல்லதிகாரக் காப்புச் செய்யுளில், முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே' என்று அச்சுதனையும் வணங்கியுள்ளார். நான்முகனும் அச்சுதனும் இந்து மதத்திலும் உண்டு. நான்முகன் = பிரமன், அச்சுதன் = திருமால். அச்சுதா அமரர் ஏறே' என்னும் திவ்யப் பிரபந்தப் பாடல் காண்க, எட்டாம் நூற்றாண்டில் இராமனது வாழ்க்கை பற்றி எழுதப் பெற்ற 'பதும புராணம் என்பது, சைன ராமாயணம்' என்று கூறப்படுகிறது. ஜினசேனர் என்பவர் கிருஷ்ணனுடைய வாழ்க்கைபற்றி எழுதிய ஹரி வம்சம்' என்னும் நூல் சைன பாரதம்' என்று கூறப்படுகிறது. சமணர்கள் இராமாயணம், பாரதம் ஆகியவற்றையும் விட்டதாகத் தெரியவில்லை. இராமனும் கிருட்டிணனும் திருமாலின் திருப் பிறவிகள் அல்லவா? சமணர்கள் நான்முகனையும் திருமாலையும் இந்து மதத்திலிருந்து பெயரளவில் தம் மதத்திற்கு இட்டுச் சென்றது போலவே, சிவனையும் இட்டுச் சென்றுளர். அருகனைக் குறிக்கும் ஆதி, பகவன், எண்குணன் என்னும் பெயர்கள் சிவனுக்கும் உண்டு என நிகண்டுகள் பலவுங் கூறியுள்ளன. அருகனுக்கு உரிய பகவன். அந்தணன், பூமிசை நடந்தோன், நான்முகன் என்னும் பெயர்கள் பிரமனுக்கும் உண்டு. இதே சொற்களால் சொல்லப்படவில்லை யெனினும், இந்தச் சொற்களின் பொருளுடைய வேறு சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரமனுக்கு, மறை யவன் (அந்தணன்), நான்முகன், பகவன், கமல யோனி,