பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மர் தவம் புரிவாள் 5.4 சம்சுகிருதப் பெயர்கள் இக்கட்டுரை நூலில், சம்சுகிருதப் பெயர்கள் பலவற்றின் பெயர்க் காரண விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இம் மொழிப் பெயர்களைப் பற்றியும் எழுத வேண்டுமா? - என்று சிலர் வினவலாம். வடமொழிச் சொற்கள், தமிழ் நூல்களில் - தமிழ்ப் பாடல்களில் கலந்திருப்பதால், அச் சொற்களின் பொருளும் தெரிந்தால்தான், தமிழ்ப் பாடலின் முழுக் கருத்தையும் அறிய முடியும். இதை உணர்த்து வதற்கே தாமரை பற்றிய இக்கட்டுரையில், வடமொழிச் சொற்கள் தமிழ்ப் பாடல்களில் ஆளப்பட்டிருப்பதை "இலக்கியச் சான்று என்னும் பெயரால் எடுத்துக்காட்ட நேரிட்டது. இவ்வாறு இலக்கிய ஆட்சிகளை எடுத்துக் காட்டியிருப்பது, பெயர்க் காரண விளக்கத்திற்குத் தக்க அரண் செய்யும. .