பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மா தவம் புரிவாள் 1. சார்பினால் பெற்ற பெயர்கள் 1.1. தண்ணீரில் தவம் நூல்களுள் தவஞ்செய்யும் முறைகள் பல சொல்லப் பட்டுள்ளன. அம்முறைகளுள். தண்ணிரில் இருந்து கொண்டு தவஞ்செய்வதும் ஒன்றாகும். இதனைப் பிரபுலிங்க லீலைமாயையின் உற்பத்தி கதியில் உள்ள 'கண்ணிய நிலத்த கங்கைக் கரையிலும் . முழையிடத்தும் புண்ணிய வனத்தும் எய்திப் புற்றுமாய் மரமா யுற்றும், தண்ணிய புனலில் தீயில் சார்ந்தும், ஊண் துயில் துறந்தும் பண்ணிய தவத்தோர் நெஞ்சம் பதைத்தன மயலின் மூழ்கி (32) என்னும் பாடலால் அறியலாம். தண்ணிய புனலில் சார்ந்து பண்ணிய தவத்தோர்' என்பது ஈண்டுக் கருதவேண்டியது. புனல் = தண்ணீர். 1.1.2. கால்வகைப் பூக்கள் - பூக்களை, நீர்ப் பூ, நிலப் பூ, கோட்டுப் (கிளைப்) பூ. கொடிப் பூ என நால் வகையாகப் பிரிப்பதுண்டு. நான்கா வதாகிய கொடிப்பூ என்பது தரையில் உள்ள கொடிப் பூவைக் குறிக்கும். முதலில் உள்ள நீர்ப்பூ என்பதில். நீரில் உள்ள தாமரை, அல்லி, ஆம்பல், நெய்தல், குவளை, கொட்டி முதலிய கொடிகளின் பூக்கள் அடங்கும்.