உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

27

அழகிய வாழ்க்கையோட்டம் வெள்ளமாய்ப் பிரவகிக்கிறது. மானகாட்சியை நாம் டிரீஸ்ரின் நாவல்களில் காண்கிறோம்." அமெரிக்க வாழ்க்கையை ஆழமாக உணர்ந்து அதன் வாழ்க்கைச் சுழிப்புகளைக் கண்டு அவற்றைக் கலைப்படைப்பாக ஆக்கினார் டிரீஸர்.

சோவியத் எழுத்தாளர் ஒய். ஜாசாஸ்கி என்பவர் டிரீஸ்ரின் கலைநோக்கு, படைப்பு இயல்பு இவற்றைப் பற்றிப் புகழ்ந்து கூறி, அவர் சோவியத் நாட்டுக்குச் சென்று திரும்புவதற்கு முன்னால் கொள்கையோ, தத்துவமோ அவருக்கு இருந்ததில்லை என்று குறிப்பிடுகிறார். அதனை மேற்கோளாகத் தருவோம்.

மனித நேசர் என்ற முறையிலும் எழுத்தாளர் என்ற முறையிலும் அவர், மனித இயல்பை முதலாளித்துவ அமைப்பு நசுக்கி அதனை வளரவிடாமல் தடுக்கிறது என்று கண்டார். அமெரிக்க சோக நாடகங்கள் நடைபெறுவதைத் தடுத்துவிடக்கூடிய ஒரு சமுதாய அமைப்பை உருவாக்குகிற வழிவகைகளைப் பற்றி மூளையைக் குடைந்து கொண்டார். இந்தத் 'தேடல்' சில நாவல்களின் கதைப் பொருளாயிற்று. சமுதாயத்தின் வளர்ச்சியில் தோன்றுகிற, தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று அவற்றைக் கருதினார்.

டிரீலர் தம்மைப் பற்றிக் கீழ்வருமாறு எழுதுகிறார்:

எனக்கு வாழ்க்கையைப் பற்றிய கொள்கைகள் எதுவும். கிடையாது. அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எவ்விதத் தீர்வும் என்னிடம் இல்லை.

அமெரிக்கச் சமூக வாழ்க்கையைக் கலைப் பொருளாகக் கொண்டு நாவல் படைக்கத் தொடங்கிய தியோடோர் டிரீஸர் 'சமூக வாழ்க்கையை உணர்ந்து அதனை மாற்றுகின்ற வழிகளைத்' தேடினார். சமூக அமைப்பின் பிரிவுகளையும் அவற்றின் பொருளாதார - அரசியல் உரிமைகளையும் விளக்கினார். பிளவுபட்ட சமுதாயத்தில் வாழும் மக்களில் இரு பிரிவுகளிலும் வாழ்கிற மக்கள் தம்மிடையே கொள்ளுகிற தொடர்புகளை ஆராய்ந்தார். இவற்றையே கலைப்படைப்புகளாக, சோக நாடகமாகப் படைத்தார். தெளிவான தத்துவ கனம் அவருடைய நாவல்களில் இல்லாவிட்டாலும் தேடல் தொடர்ந்து இருந்தது.

டிரீஸர், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகிற 'தீர்வு' முயற்சியைக் கைவிடவில்லை. 'அமெரிக்க சோக நாடகத்தில்' அவர் எழுப்பிய தெளிவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண