உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

29

புரட்சிகரமான ரியலிசத்தின் பிரதிநிதியான டிரீஸரின் வாழ்க்கையில் இருந்து விளங்குகிறது. புரட்சியின் தாக்கம் அவர் அக உலகில் பக்குவமாயிருந்த 'பிரச்சினைத் தீர்வு' முயற்சிக்கு விடையாக அமைந்தது. விமர்சன ரியலிஸ்டு எழுத்தாளர், சோஷலிஸ்டு ரியலிஸ்டு எழுத்தாளராக மலர்ந்தார்.

கலையில் குறியீட்டு முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் தற்கால முதலாளித்துவக் கலையில் ஏற்பட்டுள்ளது. 'அகவய ஆன்மீக' கொள்கையில் ஆதாரப்பட்ட குறியீடுகளை அதிகமாகப் பயன்படுத்துவது பற்றி லெனின் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக ஒரு பல்லியின் இயக்கத்தை மனிதனது வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்குக் குறியீடாகக் கொண்டு காப்கா ஒரு நாவல் எழுதியுள்ளார். மனித வாழ்க்கையின் மேன்மையை அருவருக்கத்தக்க பல்லியின் நகருதலாக அவர் காட்டியுள்ளார். அவரது வாழ்க்கைக் கண்ணோட்டம் மணிதனை ஓர் அற்ப விலங்காக நினைக்கத் தூண்டுகிறது. இக் குறியீடு பொருத்தமின்றிக் காணப்படுகிறது.

குறியீடுகள், படிமங்கள், imagery ஆகியவை மட்டுமே கலைப் படைப்பாகி விடாது.

குறியீடுகளைக் கலைப்படைப்பைச் சிறப்பிக்கப் பயன்படுத்தலாம். உவமைக்குப் பதில் அவற்றைப் பொருளைத் தெளிவாக்குவதற்குப் பயன்படுத்தலாம். Ambiguity இருண்மை என்ற கருத்தமைப்புத் தோன்ற, குறியீடுகள் தற்கால ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு புதுக் கவிதையில் ஒரு குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. எறும்புகள் செத்த பல்லியை இழுத்துச் செல்லுகின்றன. ஒரு பெரிய விலங்கைக் காண்கின்றன. அவை அதனைக் கொன்று இழுத்துச் செல்லுகின்றன. பிறகு ஒரு மரத்தைக் காண்கின்றன. அதனைத் தாக்குகின்றன. முடியவில்லை. எறும்புகள் அழிந்து போகின்றன.

இது இருண்மையில் மூடிக்கிடக்கிறது என்று ஆசிரியர் நினைக்கிறார் (இருண்மை என்பது ஒரு கலை உத்தி). எறும்புக் கூட்டம் தொழிலாளி வர்க்கத்தைக் குறிப்பிடுகிறது. அவை அழிவை மட்டுமே விளைவிக்குமாம். நிலைத்து நிற்கிற மரம், தற்கால முதலாளித்துவச் சமுதாயம். அதனை அழிக்க எண்ணித் தொழிலாளி வர்க்கமே அழிந்து போகிறதாம். இந்தக் குறியீடு தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை உணராத, உலக வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி அறியாத ஒரு கவிஞனின் குறியீடு. முதலாளித்துவ மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு இது அழியாது என்று