உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

43

டால் உருவாகியுள்ளன. பெளதீக ரசாயனம், ரசாயன பெளதீகம், உயிரியல், எஞ்சினிரிங் முதலிய புதிய விஞ்ஞானங்கள், அடிப்படை விஞ்ஞானங்களான ரசாயணம், கணிதம், பெளதீகம், உயிரியல், விண்ணியல் ஆகிய விஞ்ஞானங்களின் கூட்டுக் கலப்பால் தோன்றியவையாகும். பல விஞ்ஞானங்களின் அறிவையும் முறையியல்களையும் கூட்டாக விஞ்ஞானிகள் கையாண்டு, விஞ்ஞானங்களின் கூட்டு உழைப்பால் அவ்வவற்றின் எல்லைகளுக்கப்பாலும் சென்று முழு உண்மையை அறிய முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், பொருள்வயமான முழு உண்மையை மனித அறிவு நெருங்கும் அளவு, வரலாற்று இயக்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாம் முழு உண்மையை நெருங்கிக் கொண்டு வருகிறோம் என்பதும் உண்மையானது. ஓர் எடுத்துக்காட்டால் இக்கருத்தை விளக்குவோம்.

அணுக்கொள்கை பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்களுக்குத் தெரிந்திருந்தது. ஹிராக்ளிடஸ் என்ற பொருள் முதல்வாதி அணு பற்றிய சில கருத்துக்களைக் கொண்டிருந்தார். அக்கால விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ற தொடக்கக் கருத்துக்கள்தான் அவை. இந்தியாவில் கானடர் என்பவர் அணு பற்றிய சில கருத்துக்களை வெளியிட்டார். ஹிராக்ளிட்ஸைப் பார்க்கிலும் வரலாற்று முறையில் முன்னேறிய கருத்துக்கள் அவருடையவை. இந்திய ஆஜீவகர் கருத்துக்கள் மிகப் பிற்காலத்து டால்டன் கருத்துக்களை ஒத்திருந்தன. டால்டன் கருத்துக்கள் இப்பொழுது முற்றிலும் மாறியுள்ளன. தற்காலத்தில் அணுவின் அமைப்பும் தன்மையும் பற்றிய கருத்துக்கள் பெரிதும் முன்னேறியுள்ளன. உலக விஞ்ஞானிகள் தரையின் எல்லைகளையும் மொழி எல்லைகளையும் மீறித் தங்கள் விஞ்ஞான உழைப்பாலும் சிந்தனை உழைப்பாலும், அணு பற்றிய முழு உண்மையை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக வரலாற்று நிலைமைகளால் மனிதனது அறிவும் கருத்துக்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஹன்ராக்ளிடஸ், கானடர் ஆகியவர்களின் காலத்து உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையும் அவர்களது கருத்துக்களை உருவாக்கின. அவர்கள் டால்டனைப் போல் சிந்தித்திருக்க முடியாது. டால்டன் தொழிற்புரட்சிக்குப் பின் வாழ்ந்தவர். அவர் காலத்து வரலாற்று நிலைமைகள், உற்பத்தி சக்திகளைப் பெரிதும் வளர்ச்சியடையச் செய்திருந்தன. வளர்ச்சியடைந்த உற்பத்திச் சக்திகளைக் கொண்டு மனிதன் இயற்கையோடு போராடினான். வளர்ச்சியடையும் போதும் வளர்ச்சியடைந்த பின்