உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

47

டெரித்தவள் தாடகையென்று பாலை நிலவறட்சியை அவளுடைய தன்மையாகக் கூறுகிறான் கம்பன்.

மிகப் பெரிய ஆகிருதியை, மலையோடு ஒப்பிட்டு அங்கங்களை வருணித்துக் காட்டுகிறான்.

மிகப் பெரிய தீமையைக் காட்டுவதற்கு அந்த வனத்தின் ரிஷிகளையெல்லாம் தவம் செய்ய முடியாமல் தடுக்கத் தசையையும் இரத்தத்தையும் யாகத் தீயில் சொரிபவள் என்று காட்டுகிறான்; பேய் வருணனைகளை நாம் பரணிகளில் கண்டுள்ளோம். அவை முற்றிலும் கற்பனையான உருவங்கள். ஆனால் தாடகையென்னும் கற்பனையான கதாபாத்திரம் மூன்று கூறுகளோடும் உருவாக்கப்பட்டதுபோலத் தமிழிலக்கியத்தில் தீய பாத்திரம் எதுவுமில்லை என்ற எண்ணம் நம் மனத்தில் ஏற்படக் கம்பன் அவளுருவத்தையும் குணங்களையும் கட்புலனாகும்படியும் உட்புலனாகும்படியும் படைத்துள்ளான். அவளது வருகை, படிப்பவர் மனத்தில் திகிலை விளைவிக்கிறது.

சிலம்புகள் சிலம்பிடை செறித்த சுழலோடு
நிலம்புக மிதித்தன நெறித்த குழிபோலச்
சலம்புகவா னரர்உ கமா னிடர்க ளஞ்சி
பிலம்புக நிலக்கிரிகள் பின்தொடர வந்தாள்

அவளோடு இராமன் நடத்தும் போர், பெண்னோடு நடத்தும் போர் என்ற எண்ணம் வாசகனுக்கு ஏற்படாதபடி கொடுமை மிக்க உருவத்தைக் கம்பன் படிமமாகப் படைத்துள்ளான்.

மற்றோரிடம், சூர்ப்பனகை அழகிய பெண்ணாக இராமனை மயக்கி அவனைச் சேர வருகிற இடம். வஞ்சகம், கவர்ச்சிகரமான பெண்ணுருவில் வருகிறது. இங்கும் செவிப்புலனாகும், கட்புலனாகும் கலைப் படிமமாகச் சூர்ப்பனகை உருவாக்கப்பட்டுள்ளாள்.

பஞ்சியாளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடி யளாகி
மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

வஞ்ச மகள் என்னும் கவிக் கூற்றுத் தவிர அடுக்கிக் கூறப்பட்டுள்ள படிமக் கூறுகள் கவர்ச்சியென்னும் உணர்வை எழுப்பப் பயன்படுத்தியவையாகும். இவை செவிப்புலன் மூலம் ஸ்தூலத் தன்மையடைகின்றன. கதாபாத்திரங்கள் ஸ்தூலத் தன்மை பெறுவது, ஸ்தூலப் பொருளாயிருந்தால் மட்டுமன்று. அதனை ஆக்கும் படிமக் கூறு-