நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
9
"இயேசுவுடைய உபதேசத்தை தாங்கள் கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய, உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். .
(யோவான் :42)
"கிறிஸ்து இயேசுவே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார்"
( கொரி, 13 :1)
"இயேசு கிறிஸ்துவால் மட்டுமே நமக்குப் பாவ மன்னிப்புக் கொடுப்பதற்கு அதிகாரம் உண்டு. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ் குமாரனுக்கு அதிகாரம் உண்டு"
(மத். 9 : 6)
"இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே நமது சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்க வல்லது."
(! யோவான் i : 7)
"ஒருவனும் மனுஷரைக் குறித்துப் பெருமை பாராட்டலாகாது. "நீங்கள் கிறிஸ்துவீனுடையவர்கள்"
"இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அன்றவப்பட்ட அவரையேயன்றி வேறொருவரையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்’
(t கொரி. 2: 2)
மேற்கண்ட ஞான போதனைகளை இயேசு பெருமான் மக்களது வாழ்க்கை வளத்திற்காக உபதேசம் செய்தார். இந்த அறிவுரைகளை எல்லாம் அவருக்கும் பின் வந்த அவரது வாரிசுகள் தொகுத்து அழகான, அற்புதமான நூலாக்கி உலகுக்கு வழங்கினார்கள்.
அந்த நூலுக்கு வேதாகமம் என்றும், பைபிள் என்றும் பெயர் சூட்டி, அந்த நெறிகளைப் பின்பற்றி வருகிறார்கள்,ஆந்த மாசிக்கத்தைக் கிறித்துவம் என்று அழைத்து வருகிறார்கள்.