பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

இந்திய நாட்டிலே எந்த இடத்திலே இவ்வளவு முனிவர்கள் வாழ்ந்தார்கள் ?

சிருங்கேரியிலே எத்தகைய வாழ்க்கை இன்னுமிருக்கிறது? மதத்தின் உயிர்த்துடிப்புக்குச் சான்ருக அங்கே என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.


2. பிரயாணம்

ங்களூரிலிருந்து புனாவுக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதை செல்கிறது. அதிலே பங்களுரிலிருந்து 206 கி. மீட்டர் துரத்திலே உள்ளது கடுர். கடுரிலிருந்து 75 மைல் தூரத்தில் உள்ளது சிருங்கேரி.

ஏப்ரல் மாதத்திலே ஒருநாள் நான், எனது நண்பர், அவரது மனைவி ஆகிய மூவரும் சிருங்கேரிக்குப் புறப்பட்டோம். சென்னையை விட்டுப் புறப்பட்டுப் பங்களூர் வழியாகக் கடூர் சேர்ந்தோம். அப்போது விடியற்காலம் மணி 4-30. கடூர் ரயில்வே ஸ்டேஷன் வெளியே சிருங்கேரி செல்லும் பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்ஸிலே கூட்டம் ஏராளம், நாங்கள் ஏறியவுடன் பஸ் புறப்பட்டது. சிக்மகலூரில் நீண்ட நேரம் பஸ் நின்றது. நாங்கள் ஹோட்டலுக்குள் சென்று முகம் கழுவி வந்தோம். அம்மையார் சில பழங்கள் வாங்கினர். சிக்மகலூரிலிருந்து பிரயாணம் இன்பமாயிருந்தது. தார் ரோடு. இரு மருங்கும் மலைச்சரிவுகள்; வளைவுகள். பச்சைப் பசேல் என்ற காட்சி. ஓடைகள் பலவற்றைக் கடந்து