20
சில்லிங், பத்துப் பென்சு. ஆனல் ஒரு ஆண்டில் 76 நூலக அதிகாரிகள் 2 சில்லிங்குக்குக் குறைவாகவும் செலவிட்டனராம். நன்கு செலவிடப்பட்ட பகுதிகளிலே நூலகங்களுக்கெனச் செலவிடப்பட்ட தொகை, அரசாங்கச் சராசரித் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும். இன்னும் சில இடங்களிலே நூலகங்கட்கு மிகவும் குறைவாகச் செலவிடப்பட்டுள்ளது.
சிறந்த நூலகங்களை நன்கு பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமானல், நூலகங்களுக்குகென தலைக்குச் சராசரி பத்துப் பதினைந்து சில்லிங்குகள் செலவிடப்படல் வேண்டும். இக்கருத்தை நூலக நிபுணர் எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். அதனால் நூலகம் ஓரளவுக்கு முன்னேறத் தொடங்கியது. இவ்வளவு குறைவாகவே செலவிடப்பட்ட போதிலும் நூலகங்கள் மக்களுக்குப் பெரும் பயன் தந்துகொண்டுதான் உள்ளன. பொது நூலகங்களை ஏற்படுத்துவதிலே பொருட் சிக்கனமும் சிறந்த உதவியும் அடங்கிக்கிடக்கின்றன. ஒரு பரம்பரையினரால் வாங்கப்பட்ட நூல்கள் வழக்கொழிந்தா லொழிய, அந் நூல்கள் முழுதும் கிழியும் வரையில் பல பரம்பரை மக்களால் அடுத்தடுத்துப் படிக்கப்படும்; பயன்படும். அழுக்கடைந்த அல்லது சிதைந்த நூல் எதுவும் வழங்கப்படக் கூடாது என்பதை நூலக அதிகாரிகள் எல்லோரும் ஒத்துக்கொள்ளுகின்றனர். ஒருநூல் பல மக்கள் படித்த பின்பே சிதைந்துவிடுகின்றது . நூலக அதிகாரிகள் தங்கள் நூலகத்துக்கு வருவோருக்கு வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுத்து அளித்தல், குறிப்புக்களைத் தரல் போன்ற உதவிகளைச் செய்வதன் மூலம், தங்கள் அறிவையும் பயிற்சியையும் மேலும்