உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நெருக்காமல் நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம். நூல் தட்டுகள் பெரும்பாலும் சுவர்களை ஒட்டி, நாம் முழங்காளிட்டு எடுக்க வேண்டியதின்றி எளிதாக எடுக்கக் கூடிய அளவிலேயே அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பு நூலகத்திலே, நமக்கு வேண்டிய நூல்களையெல்லாம் இடையூறின்றிப் பரப்பிக் கொள்ளத்தக்க நலம் வாய்ந்த மேசையும், மணிக்கணக்காக இருப்பினும் கடுப்பேற்படுத்தாத நாற்காலியும் போடப்பட்டிருக்கும்.

பொது நூலகங்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற நூலகமாகும். அழகான நெடுங்கதைகளோடு ஒவ்வொரு பொருளைப் பற்றிய நூல்களும் அங்கே ஓரளவிற்கு வாங்கி வைக்கப்பட்டிருக்கும், சிறிய நூலகங்களிலே, இன்றியமையாத பொருள் பற்றிய நூல்கள்தாம் இருக்கும். ஒரு நல்ல நூலகம் அறிவுலகக் கண்ணாடி, கற்பனை ஓவியம்; நன்மக்களின் உள்ளத்திலே எழுகின்ற பலதுறை எண்ணக் குவியல்களைக் காட்டும் களஞ்சியம். இங்கிலாந்து நூலகங்களிலே, நெடுங்கதைகள் நீங்கலாக, ஏனைய நூல்கள், பொருளுக்கேற்றவாறு தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு பொருள் பற்றிய நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண வாய்ப்புண்டு. பிறகு பொருள்கள் எல்லாம் தத்தம் இனப்பொருள்களோடு சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பொருளுக்கேற்றவாறு நூல்களைத் தனியே அடுக்கி வைப்பதனாலும், தொடர்புடைய பொருள்களை அடுத்தடுத்து வைப்பதனாலும், ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய எந்த நூலாயினும் எளிதிலே எடுக்க முடிகிறது. அதே நேரத்தில் அந்நூல் எடுப்பவன் அந்நூற்-