33
கப்படும். ஒவ்வொரு நூலிலும் அதன் அட்டையில் ஓர் அட்டைப்பையும் அட்டையும் இருக்கும். அட்டையில் நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், நூலின் எண் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கும். நூல் எடுப்போர் கையிலுள்ள அட்டை வெற்றிலைப் பையைப் போன்றிருக்கும். ஆனால் வெற்றிலைப்பையின் துனியைப் போன்றிராமல், மட்டமாக அட்டையின் துணி இருக்கும். நூலிலுள்ள அட்டை எடுக்கப்பெற்று நூல் வாங்குவோர் அட்டைப்பையில் வைக்கப்படும் பிறகு அந்த அட்டை இணை நூல் திரும்புகையில் எளிதில் எடுத்தற்கேற்ற நிலையில் அடுக்கிவைக்கப்படும் நூல் திரும்புகையில், நூலட்டை, அட்டைப் பையினவிட்டு, நூலட்டைப் பைக்குள் சென்றுவிடும். நூல் வாங்குவோர், அட்டையைத் திரும்பப் பெற்றுக்கொள்வர்.
இங்கிலாந்திலுள்ள ஒவ்வொரு பொது நூலகமும் திறந்த முறையையே (Open access) மேற்கொண்டுள்ளது. திறந்த முறை என்றால், வருவோர், நூலகத்திற்குள் நுழைந்து, தம் விருப்பம்போல் எந்த நூலையும் எடுக்கும் முறை என்று பொருள். 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த முறை பழக்கத்தில் இல்லை என்று சொல்லலாம். முற்கால நூலகத்தலைவர்கள் நூல்களை வழங்குவதைவிடக் காத்தலையே பெரிதும் ஓம்பினர். எனவே அக்காலத்திலே நூல் எடுப்போர் நூல் பட்டியல் தொகையைப் பார்க்கவேண்டும். அதிலே தமக்கு வேண்டிய நூலின் பெயரை நூலகத்தாருக்குக் குறிப்பிடவேண்டும். நூலகத்தார் நூல்காட்டி கொண்டு, அவர் விரும்பும் நூல் உள்ளதா, இல்லையா என்பதைப் பார்ப்பர். இருப்பின் நூல் வழங்கப்படும். ஓர் ஐம்பதாண்டுகளுக்கு முன்
நூ-3