உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பல நூல்களையும் ஒரே நேரத்திலே பக்கத்திலே வைத்துக்கொண்டு படிக்க வேண்டியதாக இருக்கலாம் : எடுத்துச்செல்லவேண்டிய நூல்கள் கனமானவையாகவும், எடுத்துச் செல்லக் கூடாதனவாகவும் இருக்கலாம் : பார்க்க வேண்டிய நூல்களின் தேவை உடனடியாக இருக்கலாம். குறிப்பு நூலகம் ஒவ்வொன்றும் குறைந்தது உள்ளூர்த் தொடர்பான தொகுதிகளையாவது வைத்திருக்கும். கூடியமட்டும் உள்ளுர்த் தொடர்பான முழு விவரங்களையும் அது கொண்டிருக்கும். நகரம் அல்லது மாவட்டத்தின் வரலாறு, விளைபொருள், இயற்கை வளம், மக்கள் தொகை, அவர்தம் பண்பாடு. தொழில், வாழ்க்கை முறை, பெரியோர்கள் முதலிய அத்தனையும் விளக்கவல்ல நூல், துண்டறிக்கை, வெளியீடுகள், படங்கள், கையெழுத்துப் படிகள் முதலியன அந்த நூலகத்தில் இருத்தல் இன்றியமையாதது.

உள்ளூரிலிருக்கும் தொழிலகம்பற்றிய வெளியீடுகளும். உள்ளூர்ப் பெரியோர் வரலாறு போன்ற சில தனித் தொகுதிகளும் குறிப்பு நூலகத்தில் இடம்பெறலாம். இத்தகைய தனித் தொகுதிகள், நாட்டுக்கும் உள்ளுர்க்கும் பெரிதும் பயன்தருவனவாகும். தற்கால உள்ளுர் நூல் கடன் என்றதோர் புதுமுறை வளர்ச்சியால், ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற வெளியீட்டுத் தொகுதிகளைச் சில நூலகங்களிலே வைக்க வேண்டிய தேவையின் இன்றியமையாமை பெருகிவிட்டது. இதுபோன்ற தனித்துறை நூலக வளர்ச்சியால் பெரும்பயன் உண்டு. இந்த நூலகங்களைப் பிற பொது நூலகங்கள் அடிக்கடி உதவிக்காக நாடுகின்றன. அதோடு இந்தத் தனித்துறை நூலகத்-