2
விளங்கும் இப் பாரில் வாழ்ந்தவருள் தலைசிறந்த அறிஞர், கவிஞர் தம் கல்வியின் பயனாக விழுமிய கருத்துக்களைச் சிறந்த முறையிலும் சீரிய ஒழுங்கிலும் தொகுத்த தொகுப்புக்களின் தொகுதி உன்னுடன் உறவாடக் காத்திருக்கின்றன. தம் உயிர்த் தோழர்களுக்குக் கூட அவர்கள் முற்றிலும் மனந் திறந்து சொல்லியிருக்க முடியாத உயரிய கருத்துக்கள் தெள்ளத் தெளிய வரையப் பட்டு ஏதோ ஒரு ஊழியில் வரும் என்னிடம் தரப்பட்டுள்ளன" - இதனைக் கூறியவர் அறிஞர் எமர்சன் ஆவார். அவரது மொழிகள் நூலகத்தினது சீர்மையினையும் சிறப்பினையும் செம்மையுற எடுத்துக்காட்டுகின்றன. எனவேதான் ஆங்கிலப் பெருமக்கள் 'நூலகங்கள் மக்களுக்காக மக்களாலேயே நடத்தப் பெற வேண்டும்' என்ற அடிப்படைக் கொள்கையுடன் பொது நூலக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு அயராது உழைத்து, இவ்வவனி போற்றும் வண்ணம் பொதுநூலகச் சட்டத்தினை இயற்றி அத்துறையில் உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டிகளாக விளங்குகின்றனர்.
முதல் பொது நூலகம்
எழில் மிகுந்து விளங்கும் இங்கிலாந்து நாட்டில், ஏறத்தாழ கி. பி. 18-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே பொது நூலகங்கள். நிறுவப்பட்டுவிட்டன என்று கூறலாம். எடுத்துக்காட்டாக கி. பி. 1421ல், கில்டுகால் என்னும் இடத்தில் சர். ரிச்சர்டுவைட்டிங்டன்(Sir Richard Whittington) என்னும் பெரியாரால் தொடங்கப் பெற்ற பொது நூலகத்தினைக் கூறலாம். மக்கள் பயன் பெறட்டும் என்ற பெரு நோக்கோடு தம்மிடமிருந்த கிடைத்தற்கரிய பல நூல்களைச் சான் கார்ப்பெண்டர் என்பவர் இந்-