உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும்


ஒரு சிலருக்கு முதுகு வலி ஏற்பட்டுக் கஷ்டப்படுவார்கள். அவர்களும் தைரியமாய் சிகிச்சையைச் செய்து கொண்டால் போதும்.

முதுகு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதுகில் உள்ள இணைப்பு எலும்புகள் தேய்ந்துப் போவதால் தான் வலி உண்டாகிறது.

முதுகுப் புறத்தில் உள்ள இரண்டு இணைப்பு எலும்புகளில் ஒரு வகையான எண்ணெய்ப் பசை ஊறுகின்றது. இந்தப் பசை உலர்ந்து விட ஒன்றுடன் ஒன்று உராயும் போது முதுகு இணைப்பு எலும்புகள் தேய்ந்து விடுகின்றன. அதனால் தான் முதுகுப்புறத்தில் கடுமையான வலி ஏற்பட்டு உடலைத் துன்புறுத்துகிறது.

முதுகுவலி வரும் போது ஒரு பக்கத்துக் காலில் வலி தோன்றி கால் மரத்துப் போய் விடும். இதற்கு மூட்டு எலும்புகளில் தினந்தோறும் மூலிகை வகை எண்ணெய்களை டாக்டர்களிடம் பெறலாம். அந்த எண்ணெயை வலி உண்டான இடத்தில் நன்றாகத் தேய்த்து எண்ணெயை அந்த இடத்திலே ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊறுவதால் அந்த எண்ணெய்ப் பசை மூட்டு எலும்புகளுக்குச் சிறிது சிறிதாகச் செல்லும்.அதனால் எலும்புகள் உராயும்போது வலி, குறையும்.

முதுகு வலி, கழுத்து வலி, கால் மூட்டுகள் வலியுடையவர்கள் தினந்தோறும் குளித்து விட்டு, தலைக்கு எண்ணெய் தடவும் போது, அப்படியே வலி ஏற்பட்ட இடங்களிலே எல்லாம் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து அந்தந்தப் பகுதிகளை ஊறவைக்கலாம். அதனாலும் வலியைக் குறைக்கலாம்.

வலி வரும் பகுதிகளில், சாதாரணமாக வலி வந்தாலும், வராவிட்டாலும் அந்தந்த மூட்டுகளில் எண்ணெயைத்