உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆனால், பத்மா மனம் தளர்ந்து விடவில்லை. ‘இதுகளுக்கு வேறென்ன தெரியும் மண்டூகங்கள்!’ என நெஞ்சொடு புலம்பினாள்.

யார் சிரித்தால் என்ன! எவர் எப்படிக் கேலி செய்தால்தானென்ன? தான் எண்ணியபடியே, தன் வாழ்வை அமைப்பது என்று உறுதி செய்திருந்தாள் பத்மா.

அவள் கொள்கை விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, மாணவிகள், மாணவர்கள் எல்லோருக்கும் தெரிய வந்தது அதனால், அவள் நடந்து சென்றாலே, மற்றவர்கள் விசித்திரப் பிறவி எதையோ வேடிக்கை பார்ப்பது போல, அவளை கவனித்தார்கள். அவர்கள் சிரிப்போ, கேலிக் குறிப்போ தன்னை எதுவும் செய்ய முடியாது என்று மௌனமாக—ஆனால், திடமாக சுட்டிக் காட்டுவது போல, தலை நிமிர்ந்து கர்வ நடை நடப்பாள் அவள்.

3

சக மாணவிகளே கிண்டல் செய்து, மகிழ்ந்து போகிற போது, மாணவர்கள் தூங்கவா செய்வார்கள்! ‘பிளட்டானிக் லவ்வி’—‘பிளட்டானிக் காதல் காரி—போறா பாரு’… அமர லோக அற்புத, அபாரக் காதல்டா தம்பி! எல்லாரும் தெய்வீகக் காதல் வளர்த்து, பத்மா புகழ் பாடுவோமாக… என்றெல்லாம் ‘கோட்டா’ செய்து கும்மாளமிடுவர்.

‘வழக்கமான காதல் என்றால்தான், இப்படி இப்படிப் பேசணும், பழகணும் என்று புத்தகங்கள், சினிமாக்கள் எல்லாம் கற்றுக் கொடுக்கின்றன. உன்னதமான புனிதக் காதல் பயில, இது வரை, யாரும் சொல்லிக் கொடுத்ததாகத் தெரியவில்லையே. பத்மா தேவி அதற்கு உரிய டியூஷன் கற்றுக் கொடுக்கலாம். நேரடி உபதேசத்துக்காக உடனே டியூட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/14&oldid=1663317" இலிருந்து மீள்விக்கப்பட்டது