உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முல்லைப்பாட்டு

மாட்டாத மேகங்கள், குளிர்ந்த கடலில் படிந்து வேண்டுமட்டும் நீர் குடித்து மலைமுகடு அடைந்ததும், உண்டநீர், மழைத் தாரைகளாக வெளிப்பட்டுச் சொரிய மண் குளிர்ந்த மாலைப்போதில் அம்மக்களும் மனம் குளிர்ந்து போவர்.

மக்கள் மனம் குளிரத் துணை புரிந்து பெருமை கொள்ளும் மழை, பொருள் தேடியும், புகழ் நாடியும் பிரிந்து சென்ற கணவர் திரும்பிவரும் காலமாகக், குறித்துச் சென்ற கார்கால வரவை நினைவூட்டி, கார்காலம் வந்தும் கணவர் வந்திலரே என்ற மனத் துயரைத் தனித்து இருக்கும் மனைவியர்க்குத் தரும் சிறு செயலும், பழி தொழிலும் உடையது மழையே ; ஆகவே, ......... நாள்தோறும் வருவது மாலை. அம் மாலையைக் காணும் போதெல்லாம் கணவனைப் பிரிந்த மங்கையர், கலங்கிக் கண்ணிர் சொரிவது இல்லை. கணவர் குறித்துச் சென்ற கார்ப் பருவத்து மாலையைக் கண்ணுற்ற வழியே அவர்களுக்குக், கலக்கம் மிகும். ஆகவே அக்கலக்கத்திற்குக் காரணம் ஆவது கார்காலம் குறிக்க வரும் மழையே அல்லது மாலை அன்று, அவ்வாறாகவும் சிறுமை புன்மை ஆகிய இரு பழிகளைச் சுமத் தி, மாலையைச் சிறு புன்மாலை' எனப்பழித்த புலவர், கார்ப்பருவ வரவை அறிவித்துக் காதலியர்க்குக் கலக்கம் தரு விக்கும் மழையைப்பழிக்காது விட்டது, அது வரவால் தத்தம் காதலரைப் பிரிந் திருக்கும் ஒரு சில காத வியர் வருந்துவர் என்றாலும் அவர் ஒழிந்த உலகத்து அனைத்துயிரையும், அது இன்ப மாரியுள் நனைத்து விடும் பெருமையுடைமையால் போலும்,

'நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை, நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பணிக்கடல் பருகி வலன் ஏர்பு