இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17 மெழுகுச் சிறகுகள் 23 "கனுவா என்னும் அந்த யுத்தக் களத்திலே பாபர் படையின் மனமெலாம் கவர்ந்தி ழுத்த மதுவதே சாகஸி! அதுவோ, தினுசிலே புதுக! போதைத் திதிப்பிலே புதுசு 'ஆஹா கனவிலே கூட இதுபோல் கண்டடே இல்லை!" என்றார் மண்ணள்ளவந்த பாபர், மாவீரர் எல்லாம் அந்தக் கண்ணள்ளும் மதுவைச் சுவைத்தே கரகம்போல் ஆடலானார்! பெண்ணுள்ள பாசறைக்குள் பீப்பாய்கள் குவிய லாச்சு! தண்ணீரில் குளித்தி டாதோர், சரகஸி யில் நீந்த லானார்! கள்ளக் கடத்தலாய் அந்தக் கணிச்சாறாம் சரகஸியை மெல்லவே கொண்டு வந்த விற்பனை செய்த கனுவாக் குள்ளனாம் அமர சிங்கை குலுக்கிய கரத்தினாலேள் 'உள்ளேவா' எனவ ழைத்தே உளவாளியாய்க் கொண்டான் பாபர்!