உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

ஐ, ஒள என்பன சந்தியக்கரமாக அமைந்த தனி ஒலிகள் அல்ல; அகரத்தோடு யகரமும் வகரழும் சேர்ந்த கூட்டசை ஒலிகளாகும் என்பர். -

பழந்திராவிடத்திலும் அ+உ=ஒள எனவும், அ+இ= ஐ எனவும் ஆயின என்று கூறுவதைவிட, அ+ய்; அ+வ் என்பனவே ஐ, ஒள என ஆயின எனக் கூறுதல் பொருந்தும் என்பர்.”

ஐ, ஒள என்ற எழுத்துகளை நீக்கி அவற்றுக்கிணையாக அய், அவ், என்றே வழங்கலாம் என்ற கருத்துப் பரவி வருகிறது. -

அய்யர், அவ்வை, பொறுமய், செம்மய் என்று எழுதலாம்.