நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
17
“அவனுடைய பாடல்கள், ஓவியங்கள், ஆர்வங்கள் அனைத்தையும் நான் போற்றுவேன். அதே நேரத்தில் சூதுவாது இல்லாத அவனது அகங்காரத்தை நான் எனது மனதுக்குள்ளேயே பாராட்டிக் கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அவனது செயற்பாடுகளைப் பின்பற்றிட மிகவும் விழிப்புடனேயே இருந்தேன்.”
“என்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் முயற்சிப்பேன். சில நேரங்களில் எனது யூகம் சரியாகவும் இருக்கும். தவறுதலாகவும் தென்படும். ஆனால், என்னைப் பற்றி பிறருடைய கருத்தைத் தெரிய எனக்கு வருத்தமாகவே இருக்கும். இக்காரணத்தால் தான், இதற்கு சூது வாதில்லாத நேர்மாறான தன்மையைக் கண்டு செர்ஜியசை நான் மிகவும் பூஜிக்கும் நிலக்குள்ளானேன்.
என்னுடைய இரண்டாவது அண்ணன், தியாக மனம் உடையவன்! அதற்குக் காரணம் அவரிடம் இருந்த சமயப் பற்றுத்தான்.
டால்ஸ்டாய் குழந்தைப் பருவ வளர்ச்சிகளில் சில இவை. தனியாகவே அவர் அமர்ந்து எதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டே இருப்பார். இவ்வாறு அவர் மணிக் கணக்கில் தனிமைச் சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்.
எவ்வளவு நேரம், எத்தனை நாட்கள் தான் இவ்வாறு ஒரு இளைஞன் தனிமைச் சிந்தனையில் இருக்க முடியும்? அவர் என்ன யோகியா? ஞானியா? தியானியா சாதாரணமாகப் பதினைந்து வயதுடைய சிறுவர்தானே! எனவே, தனிமை ஒரு நாள் தலைதூக்கித் தத்தளிக்க வைத்தது. எரியும் தீயானது! வெடித்துச் சிதறியது.
எல்லோரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்? இதற்குள் ஏன் மனக்கட்டுப்பாடும் புலனடக்கமும்? உயிருள்ள வரை எல்லா இன்பங்களையும் ஏன் அனுபவித்துச்