உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

லியோ டால்ஸ்டாயின்

எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், நமது எழுத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று டால்ஸ்டாய் ஆச்சரியப்பட்டுப் போனார்.

இவ்வளவு பெரிய மதிப்பும், மரியாதையும் நாட்டில் உருவானதைக் கண்ட டால்ஸ்டாய், தனது ராணுவப் பணியை ராஜிநாமா செய்து விட்டார். அயல் நாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்று தங்கி தனது எழுத்துக்களுக்கான கருக்களைச் சிந்தித்தார்.

1857-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். பாரிஸ் மாநகர் சென்றார். அங்கே அவர் வருகை தருவதைக் கேள்விப்பட்ட வரும், செயிண்ட பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெற்ற டால்ஸ்டாயின் பாராட்டுக் கூட்டவிழாவில் முன்பு கலந்து கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்ந்த வருமான டர்கெனிவ், டால்ஸ்டாயை மீண்டும் சந்தித்து வரவேற்றார். எழுத்தாளர்கள் இருவரும் சில நாட்கள் பாரிஸில் தங்கியிருந்தார்கள்.

லியோ டால்ஸ்டாய் பாரிசில் தங்கியிருந்த போது. ஒரு மரண தண்டனைக் கைதிக்கு தண்டனையை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. கைதியை கில்லட்டின் என்ற வெட்டுக் கத்தி முன்பு அழைத்து வந்து அமரவைத்தார்கள். கொடுவாளின் கோரமான ஒலி கேட்டது; அவ்வளவுதான் கைதியின் சிரச்சேதத்தைக் கண்ட அவரது மனம் நடுக்கம் கொண்டது; பதறிப்போனார்! ஐயோ இவ்வளவு பெரிய கொடூரமா? என்று விருட்டென்று எழுந்து வந்து விட்டார். அந்த மரணதண்டனையை நேரில் கண்ட அவர் அதுபற்றி எழுதும் பதட்டத்தைப் பாருங்கள்: