48
லியோ டால்ஸ்டாயின்
அவர் தனது எழுதுகோலை முழுக்க முழுக்க இலக்கியப் பணியிலே ஈடுபட வைத்தார்.
எழுத்துப் பணி செய்வதுடன் அவர் நிற்கவில்லை; இடையிடையே கிராமத்து மக்களுக்குரிய நற்பணிகளையும் ஆற்றிவந்தார். ஏழை எளியோர், அநீதிகளுக்கு ஆட்பட்டோர், பண ஆதிக்கத்துக்குப் பலியானோர், வாழ்க்கைக்கு ஆதரவற்றோர் போன்றவர்கள் அவரது உதவியைத் தேடி வந்தால் அவர்களுக்குரிய பரோபகாரங்களையும் மனிதாபிமானத்துடன் செய்து வந்தார்.
டால்ஸ்டாயும், காலமான அவரது அண்ணன் நிக்கோலசும் அதே கிராமத்தில் வாழ்ந்திருந்த போது அச்சப்பட்டு ஒதுங்கியிருந்த கிராமத்து மக்கள், இப்போது முன்பு போல இல்லாமல் டால்ஸ்டாயிடம் தாரளமாகப் பழகிடும் தன்மை பெற்றனர்.
அதற்குக் காரணம், டால்ஸ்டாய் தனது கிராமத்தில் துவங்கிய ஆரம்பப் பள்ளியின் அருமையின் பெருமையை உணர்ந்ததுதான். அதன் வாயிலாக அவர் மக்கள் நேயமுடைய பரோபகாரி என்று புரிந்து கொண்டதும். மற்றொரு காரணமாகும்.
அவர் வாழ்ந்து வந்த கிராமத்துக்கு அருகிலேயே ஜார் மன்னனது ராணுவப் படை முகாம் பிரிவுகளில் ஒன்றிருந்தது. அந்தப் படையின் அதிகாரி ஒரு முரடன், ஆணவம் கொண்டவன், இரக்க நெஞ்சமற்ற அரக்கனாக இருந்தான். அதனால் படைவீரர்களை அவன் மிகக் கொடுமையாக நடத்தி வந்தான்.
அந்தப் படை முகாமிலே சிபனின் என்ற ஒரு போர்வீரன்; அவனுக்கும் அதிகாரிக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கூட ஒத்துவராத முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். அதிகாரி எப்போது பார்த்தாலும் அடாவடித்தனமாக சிபனிடம் நடந்து